சிறந்த மருத்துவ காப்பீடை தேர்ந்தெடுப்பது எப்படி? • Consider 10 Things Before selecting Health insurance • How to buy best Medical Insurance • Tneguys

 ஒரு மருத்துவ காப்பீட்டின் (Medical Insurance) முக்கியத்துவம் பற்றி நமக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும் ஏனெனில், இதற்கு முன்பாக நாம் மருத்துவ காப்பீட்டின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக பார்த்துள்ளோம். ஆனால், ஒரு மருத்துவ காப்பீடு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஒரு சரியான மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். 

இன்று, நாம் ஒரு மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய 10 காரணிகளை (Factors) பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

முதலில் அவை என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

1. Insurance company  (காப்பீட்டு நிறுவனம்)

2.claim settlement Ratio (காப்பீட்டுத் தொகை‌ வழங்கு விகிதம்)

3.Pre and Post Hospitalisation (முன் மற்றும் பின் மருத்துவ செலவு)

4.One day Medical Expanses (ஒரு நாள் மருத்துவ செலவு)

5.Waiting Period (காத்திருப்பு நேரம்)

6.No Claim Bonus (காப்பீடு பயன்படுத்தாமை வெகுமதி)

7.Number of Network Hospitals (மருத்துவமனை தொடர்பு எண்ணிக்கை)

8.Co-Payment (காப்பீட்டாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனம் சேர்ந்து செலவு செய்தல்)

9.Room Rent ( மருத்துவ அறை வாடகை)

10.Coverage Amount (காப்பீட்டுத் தொகை)

1. Insurance company  (காப்பீட்டு நிறுவனம்)

 முதலில், காப்பீட்டு நிறுவனம் (Insurance company) நம்பகத்தன்மையான நிறுவனமாக உள்ளதா  என்று  தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதன் வாடிக்கையாளர் சேவை (Customer service) எப்படி உள்ளது, நம்முடைய காப்பீட்டு பணத்தை பெறுவதற்கான (Insurance Claim) வழி எளிமையாக உள்ளதா என்பது பற்றி தெரிந்து தேர்வு செய்யுங்கள்.

2. Claim Settlement Ratio (காப்பீட்டுத் தொகை‌ வழங்கு விகிதம்)

 காப்பிட்டு தொகையை கேட்ட காப்பீட்டாளர்களில் எத்தனை பேருக்கு அந்த நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது என்பதே  அந்த நிறுவனத்தின் காப்பீட்டுத் தொகை‌ வழங்கு விகிதம் (Claim Settlement Ratio). அதாவது,  காப்பீட்டுத்தொகை கேட்டவர்களுக்கும் (Claims) காப்பீட்டுத்தொகை பெற்றவர்களுக்கும் (Claim Received) உள்ள விகிதம். 

இந்த விகிதம் (Ratio)  அதிகமாக இருந்தால் அந்த நிறுவனம் அதிகமான பேருக்கு காப்பீடு தொகையை வழங்கி உள்ளது என்று அர்த்தம். அதனால் இதனை தெரிந்து தேர்வு செய்யுங்கள்.

3. Pre and Post Hospitalisation (முன் மற்றும் பின் மருத்துவ செலவு)

 நாம் ஒரு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் பொழுதும் சிகிச்சை முடித்து திரும்பும் பொழுதும் நமக்கு சில பரிசோதனைகள் செய்வார்கள், சில மருந்துகள் எழுதி கொடுப்பார்கள். இதுவே முன் மற்றும் பின் மருத்துவம் (Pre and Post Hospitalisation) ஆகும். நமது மருத்துவ காப்பீட்டில் இதற்கான செலவும் உள்ளதா என்று தெரிந்து தேர்வு செய்யுங்கள்.

4. One day Medical Expanses (ஒரு நாள் மருத்துவ செலவு)

 நமக்கு ஏற்படும் சில மருத்துவ சிகிச்சையானது ஒரு நாளிலேயே முடிந்து விடும். ஆனால் அதற்கு ஆகும் செலவானது மிகவும் அதிகமாக இருக்கும். இது போன்று ஒரு நாளில் ஏற்படக்கூடிய  மருத்துவ செலவு (One Day Medical Expanses) நம் மருத்துவ காப்பீட்டிற்குள் வருகிறதா என்று தெரிந்து தேர்வு செய்யுங்கள். 

5. Waiting Period (காத்திருப்பு நேரம்)

   நாம் எடுக்க கூடிய மருத்துவ காப்பீடானது இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து தான் செயல்பாட ஆரம்பிக்கும். இந்த நேரம் தான் காத்திருப்பு நேரம் (Waiting Period). இதற்கான, காரணமாக நமக்கு முன்பு  ஏற்பட்ட நோய் உள்ளிட்டவற்றை கூறுவார்கள். இந்த காத்திருப்பு நேரம் குறைவாக இருந்தால் நல்லது. அதனால்,  இது குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்று தெரிந்து தேர்வு செய்யுங்கள். 

6. No Claim Bonus (காப்பீடு பயன்படுத்தாமை வெகுமதி)

 நம்முடைய மருத்துவ காப்பீட்டை நாம் பயன்படுத்தவில்லை எனில் அந்த காப்பீட்டு நிறுவனமானது நமக்கு ஒரு வெகுமதி (Bonus) தரும். அதாவது நம்முடைய தவணைத் தொகையை (Premium Amount) குறைக்கும். இதுவே காப்பீடு பயன்படுத்தாமை வெகுமதி (No Claim Bonus) என்று சொல்லப்படுகிறது.

இதனை நாம் நம்முடைய தவணைத் தொகை குறைப்பதற்கு பதிலாக நம்முடைய காப்பீட்டுத்தொகை (Insurance Amount) அதிகரிப்பதற்காக பயன்படுத்தலாம். அதனால் இதனை பற்றி தெரிந்து தேர்வு செய்யுங்கள்

7. Number of Network Hospitals (மருத்துவமனை தொடர்பு எண்ணிக்கை)

 நம்முடைய காப்பீட்டு நிறுவனம் எத்தனை மருத்துவமனைகளுடன் (Number of Network Hospitals) தொடர்பில் உள்ளது (Tie-up) தெரிந்து கொள்ளுங்கள். 

நாம் சிகிச்சை எடுக்கும்  மருத்துவமனையோடு தொடர்பு வைத்திருந்தால் (Tie-up) அங்கு  நம்மால் பணமில்லாத சிகிச்சையை (Cashless Treatment) மேற்கொள்ள முடியும். அதனால் நாம் அடிக்கடி செல்லக்கூடிய அல்லது நமக்கு மிகவும் அருகில் உள்ள மருத்துவமனையுடன் நம்முடைய காப்பீட்டு நிறுவனம் தொடர்பு (Tie up) வைத்துள்ளதா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் நமக்கு மிகவும் நல்லது. 

மேலும், நம்முடைய காப்பீட்டு நிறுவனம் அதிக மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்திருந்தால் நம்மால் அந்த மருத்துவமனைகளிலும் பணமில்லாத சிகிச்சையை மேற்கொள்ள முடியும். அதனால் நம்முடைய காப்பீட்டு நிறுவனம் எத்தனை மருத்துவமனைகளுடன் தொடர்பில் உள்ளது என்பது பற்றி தெரிந்து  தேர்வு செய்யுங்கள்.

8. Co-Payment (காப்பீட்டாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனம் சேர்ந்து செலவு செய்தல்)

   நாமும் நம்முடைய காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து நம்முடைய மருத்துவ செலவை செய்வதே Co-Payment ஆகும்.

பெரும்பாலும், இதனை தவிருங்கள். ஏனெனில், நாம் ஒரு மருத்துவ காப்பீடை எடுப்பது என்பது நமக்கு சிகிச்சையின் போது எந்தவித பணம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்‌.   

        ஆனால், இந்த Co-Payment-ல்  நாம் பணம் செலுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். இதனால், நமக்கு ஏற்படும் நன்மையை விட பிரச்சினைதான் அதிகம். அதனால்‌ தவணைத் தொகை (Premium Amount) சற்று ‌அதிகமாக இருந்தாலும் நம்முடைய மருத்துவ செலவு (Medical Expanse) முழுவதுமாக காப்பீட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ள கூடிய காப்பீட்டை தெரிந்து தேர்வு செய்யுங்கள்.

9. Room Rent (மருத்துவ அறை வாடகை)

 நம்முடைய மருத்துவ காப்பீட்டில் மருத்துவ அறை வாடகை (Room Rent) சார்ந்த நிபந்தனை (Terms or conditions) ஏதேனும் உள்ளதா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 அவ்வாறு, இருந்தால் அதனை தவிருங்கள். ஏனெனில் அந்த காப்பீட்டு நிறுவனம் கொடுக்கக்கூடிய வாடகை விட அதிகமான வாடகை வந்தால்  நாம்‌ அதற்கான பணத்தை  கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் இதனை தெரிந்து தேர்வு செய்யுங்கள்.

10. Coverage Amount (காப்பீட்டுத் தொகை)

       காப்பீட்டுத் தொகை (Coverage Amount) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  ஏனெனில், சரியான காப்பீட்டுத் தொகையை நாம் தேர்ந்தெடுத்தால் தான்  நம் எதிர்காலத்தில்  அது நமக்கு உதவியாக இருக்கும்.

    நம்முடைய குடும்பத்தின் நிலை, பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நம் தேவைக்கு ஏற்றவாறு சரியான காப்பீட்டு தொகையை தேர்வு செய்ய வேண்டும்.

 அதனால், நம்முடைய தேவைகள் தெரிந்து தேர்வு செய்யுங்கள்.

முடிந்தவரை வரை காப்பீட்டை இளம்வயதிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் நமக்கு தவணைத் தொகையும் குறைவாக இருக்கும், வயதான பிறகு அந்த காப்பீடு நமது மருத்துவ தேவைக்கு உதவியாகவும் இருக்கும்.  மேற்கண்ட 10 காரணிகளும் உங்களுக்கு ஒரு சரியான மருத்துவ காப்பீட்டை தெரிந்திருக்க உதவியாக இருக்கும்.  

கடைசியாக, மீண்டும் ஒருமுறை மருத்துவ காப்பீட்டை தெரிந்து தேர்வு செய்யுங்கள்..

எளிமையான காணொளியாக (Video) YouTube-ல் காண,



Powered by Blogger.