Active Income vs Passive • Easy Money making Ways In Tamil

 இன்றைய காலகட்டத்தில் நாம் தூங்காமல் உழைத்தால் தான் நம்முடைய தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று சூழ்நிலையில் இருக்கிறோம். ஆனால் நாம் தூங்கும் போதும் நமக்கு ஒரு வருமானம் (Income) கிடைத்ததால் எப்படி இருக்கும்.. 

இன்று, நாம் அந்த வருமானம் சார்ந்து தான் தெரிந்து கொள்ள போகிறோம்..


வருமானம் (Income) என்றால் இருவகை வருமானம் உண்டு. ஒன்று செயல் வருமானம் (Active Income) மற்றொன்று செயலற்ற வருமானம் (Passive Income).


செயல் வருமானம் (Active income)...

      இந்த செயல் வருமானத்தில் நாம் நம்முடைய நேரத்தையும் உழைப்பையும்  கொடுத்தால் மட்டுமே நமக்கு வருமானம் கிடைக்கும்..


உதாரணமாக, நாம் ஒரு நிறுவனத்திற்காக செய்யக்கூடிய வேலை (Job), நாமே முழுவதுமாக ஈடுபட்டு செய்ய கூடிய தொழில் உள்ளிட்டவை.


செயலற்ற வருமானம் (Passive Income)...


      அடுத்ததாக, செயலற்ற வருமானம் இந்த வகை வருமானத்தில் நாம் முழுவதுமாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. நாம் முன்பு செய்த செயல் அல்லது முதலீட்டின் (Investing ) மூலமாக நமக்கு வருமானம் கிடைக்கும்..


உதாரணமாக, நாம் நம்மை சுற்றியுள்ள மக்களுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி அதனை வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டுவது.


செயல் வருமானத்தில் நாம் இருந்தால் மட்டுமே நமக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், செயலற்ற வருமானத்தில் நாம் இல்லையென்றாலும் வருமானம் கிடைக்கும்.

நாம் அனைவரும் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டே இருக்க முடியாது.


   அதனால், நமக்கு முடிந்தவரை ஒரு செயலாற்ற வருமானம் (Passive Income) வருமானத்தை உருவாக்கி கொள்வது நல்லது...


சரி, கீழே சில செயலற்ற வருமான

(Passive Income) வழிகள் உள்ளது அதை பற்றி பார்ப்போம்..


1. வாடகை வருமானம் (Rent)..


     நாம் முன்பு பார்த்தது போல நம்மை சுற்றியுள்ள மக்களுக்கு தேவையான பொருட்கள்,வீடு,இடம் உள்ளிட்டவற்றை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.


2.காப்புரிமை தொகை (Royalty)..


  நாம் ஏதேனும் புத்தகம் (Book) எழுதினாலோ அல்லது புதிய கண்டுபிடிப்பு (New Innovation) செய்தால் அதனை பயன்படுத்துபவர்கள் நமக்கு குறிப்பிட்ட அளவு பணம் தரவேண்டும். இதன் மூலம் நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும்.


3.முதலீட்டு வருமானம் (Investment Income)..


    நாம் நம்முடைய பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும்..

உதாரணமாக, வைப்பு நிதி முதலீடு, பங்கு சந்தை முதலீடு, பரஸ்பர நிதி முதலீடு, உள்ளிட்டவற்றை கூறலாம். இதன் மூலம் நாம் வட்டி வருமானம், ஈவுத்தொகை வருமானம் உள்ளிட்டவற்றை பெறலாம்..


4.இணையம் சார்ந்த வருமானம் (Internet Based Income)..


    நாம் இணையத்தை பயன்படுத்தி வருமானம் ஈட்ட முடியும். உதாரணமாக நமக்கு ஏதேனும் ஒரு துறையில் அனுபவம் இருந்தால் அல்லது அந்த துறையை பற்றி நன்கு தெரிந்து இருந்தால் நாம் அதனை பற்றி இணைய புத்தகம் அல்லது வலைப்பதிவு, வலையொலி மூலம் எளிமையாக விளக்க முடியும் இதன் மூலம் நாம் வருமானம் ஈட்டலாம்.

       மேலும், வேறு ஒருவரின் பொருளை இணையத்தில் விளம்பரம் செய்து அதனை விற்பனை செய்ய வைப்பதன் மூலம் கூட நம்மால் வருமானம் ஈட்ட முடியும்...


இவை‌‌ தவிர, இன்னும் பல்வேறு வகையான செயலற்ற வருமானம் இருக்கலாம். அதில் நமக்கான செயலற்ற வருமானத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்...


முடிவாக முடிவெடுங்கள் உங்களுக்கான செயலற்ற வருமானத்தை (Passive Income) உருவாக்குங்கள்!!


உங்களுக்கு தெரிந்த வேறு செயலற்ற வருமானம் பற்றி கீழே உள்ள உங்கள் கருத்து பகுதியில் தெரிவியுங்கள்.....

Powered by Blogger.