Gold Vs Gold ETF in Tamil • ETF • TNEGUYS

 நமக்கு தங்கம் (Gold) பற்றி தெரியும். அதுபோல, தங்க ETF (Gold ETF) பற்றியும் நாம் முன்பு பார்த்திருக்கிறோம். 

இன்று, நாம் இவை இரண்டுக்குமான ஒப்பீடு (Comparison) பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


பொதுவாக, நாம் தங்கம் (Gold) வாங்க விரும்பினால், நேரடியாக நகை கடைக்கு (Jewellery Shop) சென்று நமக்கு பிடித்த மாதிரியான நகையை நம்மிடம் உள்ள பணத்தை பொறுத்து வாங்கி வைத்துக் கொள்ளவோம். 

தங்க நகை விற்பனை செய்யும் நிறுவனம் தங்கத்தை மொத்தமாக வாங்கி அதனை நமக்கு பிடித்த வடிவமைப்பில் (Design) மாற்றி நம்மிடம் அதனை விற்பனை செய்யும். 

அதேபோல, நமக்கு ஏதேனும் பண தேவை ஏற்பட்டால் அந்த நகையை தங்கம் (Gold) வாங்க கூடிய நபர்களிடமோ நிறுவனத்திடமோ விற்று  பணமாக மாற்றிக் கொள்வோம்.

        கிட்டத்தட்ட,    இதே     போன்று     தான்  Gold ETF-ம் செயல்படுகிறது. இங்கேயும் ஒரு நிறுவனம் தங்கத்தை மொத்தமாக வாங்கி அதனை நமக்கு தேவையான டிஜிட்டல் வடிவத்திற்கு (Digital Format or Dematerialised Form) மாற்றுகிறார்கள். அதாவது, நாம் வங்கியில் நம்மிடம் உள்ள பணத்தை நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைப்போம் அல்லவா, அது போன்று தான். தங்கத்தை டிஜிட்டல் வடிவத்திற்கு (Dematerialised Form) மாற்றிய பிறகு அதை பங்குச்சந்தையில் பட்டியலிடுவார்கள். அதாவது, அதனை பங்குச் சந்தையில் விற்பனை செய்வார்கள்.

நாம் அதனை பங்குச்சந்தையில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால், சாதாரண தங்கத்தை வாங்க நமக்கு பணம் இருந்தால் மட்டும் போதும். ஆனால், இந்த GOLD ETF ஐ வாங்க நமக்கு ஒரு டீமேட் கணக்கு (Demat Account) வேண்டும். ஏனெனில், இந்த டீமேட் கணக்கில்  (Demat Account) தான் நம்முடைய தங்க ETF (Gold ETF) ஆனது வரவு வைக்கப்படும்.

நாம் நம்மிடம் இருக்கும் தங்கத்தை தங்கம் வாங்குபவர்களிடம் விற்று பணமாக்குவோம் அல்லவா, அதேபோல இந்த GOLD ETF-ஐயும் அதை வாங்குபவர்களிடம் விற்று பணமாக்கி கொள்ளலாம். நாம் இந்த Gold ETF பங்குச்சந்தையில் தான் வாங்குகிறோம். அது போலத்தான், அதனை நாம் மீண்டும் பங்குச்சந்தையில் விற்று பணமாக்கி கொள்ளலாம். 

பொதுவாக, ETF (Exchange Traded Fund) ஆனது ஒரு குறியீட்டை (Index) பொறுத்து செயல்படும்.  தங்கமானது (Gold) பல காரணங்களால் ஏற்ற இறக்கம் அடையும். இந்த தங்கத்தை பொறுத்து செயல்படுவது தான் இந்த தங்க ETF (Gold ETF). அதாவது, தங்கத்தை ஒரு குறியீடாக (Index) வைத்துக் கொண்டு இந்த  தங்க ETF  ஆனது செயல்படுகிறது.

மேலும் உதாரணமாக, Nifty 50 என்பது ஒரு குறியீடு. அதாவது பங்குச்சந்தையில் பலவகையான குறியீடுகள் (Index) இருக்கும் அதில் Nifty 50-யும் ஒரு குறியீடு (Index). 

இந்த குறியீட்டில் தேசிய பங்குச் சந்தையில் (NSE - National Stock Exchange) பட்டியலிடப்பட்டிருக்கும் முதல் தர 50 நிறுவனங்கள் (Top 50 Companies) இடம்பெற்றிருக்கும். இந்த நிறுவனங்கள் (Companies) தங்கள் நிறுவன மதிப்பை (Market Capital) பொறுத்து அந்த குறியீட்டில் ஒரு பங்களிப்பை (Weightage) கொடுக்கும். இந்த Nifty 50 குறியீட்டை (Index) பொறுத்து ஒரு ETF செயல்பட்டால் அது NIFTY 50 ETF. இவ்வாறாக, ஒரு குறியீட்டை பொறுத்து செயல்படுவது தான் இந்த ETF (Exchange Traded Fund).

இறுதியாக,

தங்கம் சரியா...

தங்க ETF சரியா...

நீங்களே முடிவு செய்யுங்க!!

உங்கள் கருத்தை கீழே சொல்லுங்க!!!

வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,




Powered by Blogger.