Mutual fund in Tamil ? • How Mutual Fund works? • Mutual Fund Definition • Tamil • Tneguys

 பரஸ்பர நிதி (Mutual Fund) என்பது ஒருவகை முதலீட்டு முறையாகும். 


இந்த வகை முதலீட்டில் நம்முடைய பணமானது முதலீட்டு துறையில் அனுபவம் வாய்ந்த நபரால் (Fund Manager) கையாளப்படுகிறது.

 இவர் நம்முடைய பணத்தை சிறப்பாக செயல்படும் நிறுவனத்தின் பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை முதலீடு செய்து நம்முடைய பணத்தை அதிகமாக்குவார். 

 இதற்காக, அவர் நம்மிடம் கட்டணமாக  குறிப்பிட்ட சதவீத பணத்தை (Expanse Ratio) பெற்றுக்கொள்வார்.

 மேலும், இந்த முறையில் நம்முடைய பணமானது பிரித்து முதலீடு செய்யப்படுவதால்  நம்முடைய நஷ்ட அளவு குறைவாக உள்ளது.

இம்முறையில் நம்முடைய பணத்தை இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம். ஒன்று மொத்தமாக (lump sum)  ஒருமுறை முதலீடு செய்வது மற்றொன்று சிறிது சிறிதாக மாதாம் மாதம் அல்லது வாரம் வாரம் ( SIP systematic investment plan ) நம்முடைய பணத்தை முதலீடு செய்வதாகும்.

முதலீட்டுத் துறையில் போதிய அனுபவம் இல்லாத அல்லது அதற்கான நேரம் இல்லாத நபர்கள் முதலீடு செய்ய விரும்பும் போது இந்த வகை முதலீடு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

மேலும் YouTube வீடியோ அறிய,


 

Powered by Blogger.