Mutual Fund Types • Explanation • Tamil • Tneguys

 பரஸ்பர நிதியை (Mutual Fund) அதன் முதலீட்டு முறையை பொறுத்து  சில வகைகளாக பிரிக்கலாம்.

அந்த வகைகள் பின்வருமாறு,

1.Equity Mutual Fund

 (பங்குச் சந்தை முதலீடு)

2.Debt Mutual Fund

(கடன்‌ சந்தை முதலீடு)

3.Index  Mutual Fund

(பங்குச் சந்தை குறியீட்டு முதலீடு)

4.Hybird Mutual Fund

(இருவகையில் பிரித்து முதலீடு)

5.Other Mutual Funds

(மற்ற முதலீடுகள்) 

மேற்கண்டவற்றை சற்று விரிவாக காண்போம்.

1.Equity Mutual Fund 

(பங்குச் சந்தை முதலீடு)

         இந்த வகை பரஸ்பர நிதியில் நம்முடைய பணமானது அதிக அளவில் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.      

         இந்த வகையானது மிகுந்த ஆபத்தான பரஸ்பரநிதி வகையாகும்.       இது அதிகமான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் முதலீடாகும்.

2.Debt Mutual Fund

 (கடன்‌ சந்தை முதலீடு)

       இந்த வகையில் நம்முடைய பணமானது கடன் பத்திரங்கள், Government Bonds,. உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படுகிறது.

        இது மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இது குறைந்த Risk எடுக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற முதலீட்டு முறையாகும்.

3.Index  Mutual Fund

 (பங்குச் சந்தை குறியீட்டு முதலீடு)

          இந்த வகை பரஸ்பர நிதியில் நம்முடைய பணமானது பங்குச் சந்தையில் உள்ள குறியீட்டை பொறுத்து முதலீடு செய்யப்படுகிறது.

         அதாவது நம்முடைய பங்குச் சந்தையில் உள்ள சென்செக்ஸ், நிஃப்டி (Sensex ,Nifty) போன்ற குறியீடுகளில் உள்ள நிறுவனங்களின் பங்களிப்பை பொறுத்து முதலீடு செய்யப்படுகிறது.

         மேலும் இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற முதலீடாகவும் எளிமையான முதலீடாகவும் கருதப்படுகிறது.       

4.Hybird Mutual Fund

(இருவகையில் பிரித்து முதலீடு)

          இந்த வகை பரஸ்பர நிதியில் நம்முடைய முதலிடானது இருவழிகளில்  செய்யப்படுகிறது.

        அதாவது மேற்கண்ட முதலீட்டு முறைகளில் ஏதேனும் இரு வழிகளில் முதலீடு செய்யப்படுகிறது.    

         எடுத்துக்காட்டிற்கு பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டில் 50 சதவீதம் மற்றும் கடன் சந்தை சார்ந்த வகையில் 50  என பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.        

          இதனால் நம்முடைய பணம் இழப்பு அபாயம் பாதியாகக் குறைக்கப்படுகிறது.

5.Other Mutual Funds

(மற்ற முதலீடுகள்) 

         மேற்கண்ட முறைகளில் முதலீடு செய்யாமல் மற்ற முறைகளில் முதலீடு செய்வது அனைத்தும் இந்த வகையைச் சார்ந்தது.

         இந்த வகை முதலீட்டில் நம்முடைய பணமானது மேற்கண்ட முதலீடுகள் அல்லாத Real estate., உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.


மேலும் தகவல்களை YouTube வழியாக அறிய,



Powered by Blogger.