மருத்துவ காப்பீடு • Medical Insurance • Health Insurance • simple Explanation • Tneguys

  இன்றைய சூழ்நிலையில்  நோய்களும் அதிகரித்து கொண்டு இருக்கிறது அதற்கான மருத்துவச் செலவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதனை எப்படி சமாளிப்பது? என்பது பற்றி நம்மில் பலருக்கு அச்சம் இருக்கும். இதனை சாமாளிக்க நமக்கு மருத்துவ காப்பீடு (Health insurance)  உதவியாக இருக்கும்.

     இன்று, நாம் மருத்துவ காப்பீடு (Health insurance)  என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

நம்முடைய எதிர்கால மருத்துவத் தேவைக்காக நாம் செய்ய கூடிய காப்பீடு தான் மருத்துவ காப்பீடு.

       நமக்கு நோய் ஏற்பட்டாலோ, விபத்து நேர்ந்தாலோ அல்லது ஏதேனும்  மற்ற மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலோ இந்த மருத்துவ காப்பீடானது நமக்கு ஒரு நிதி சார்ந்த  ஆதரவாக இருக்கும்.

           எடுத்துக்காட்டாக, நம்மிடம் எந்த வகையான நிதி சார்ந்த சொத்துகளோ பெரிய சேமிப்போ இல்லை.           அதே நேரத்தில் நம்முடைய வருமானத்தை எதிர்பார்த்தே நம் குடும்பத்தின் எதிர்காலமும், நிகழ்காலமும் உள்ளது.  இந்த சூழ்நிலையில் நமக்கோ அல்லது நம் குடும்பத்தினர் யாருக்கோ உடல் நிலை சரியில்லை என்றால் அந்த மருத்துவ செலவிற்காக நாமும் சரி நம்முடைய குடும்பமும் சரி மிகவும் மோசமான துன்பத்தை சந்திக்க நேரிடும்..

             மேலும், ஏற்பட்ட நோயை குணப்படுத்த நம்மிடம் போதுமான பணம் இல்லையேனில் உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது. 

              இந்த ஒரு சூழலில் இருந்து நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் மீட்டு நமக்கான ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும்  தர கூடியது இந்த மருத்துவ காப்பீடு. நாம் அனைவரும் கண்டிப்பாக ஒரு சிறந்த மருத்துவ காப்பீடு (Health insurance) செய்ய வேண்டும்.

சரியான காப்பீடு செய்வோம்....                நம்முடைய ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் காப்போம்...

  YouTube வழியாக தகவல்களை அறிய,      

           


Powered by Blogger.