டிவிடெண்ட் ஈல்டு • Dividend Yield Calculation • Formula • Example •Tneguys

நாம் நல்ல டிவிடெண்ட் (Dividend) தரக்கூடிய நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பினால் கண்டிப்பாக நாம் டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், நம்மால் டிவிடெண்ட் ஈல்டை (Dividend Yield) பயன்படுத்தி நல்ல டிவிடெண்ட் (Dividend) தரக்கூடிய நிறுவனத்தை கண்டுபிடிக்க  முடியும்.

 இன்று, நாம் டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) என்றால் என்ன?, அதனை எவ்வாறு கணக்கிடுவது, பயன்படுத்துவது? என்பது பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) என்றால் என்ன?

               ஒரு நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலையில் எத்தனை சதவீதத்தை அந்த நிறுவனம் டிவிடெண்டாக (Dividend) தன்னுடைய பங்குதாரர்களுக்கு கொடுத்துள்ளது என்பதே அந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) ஆகும்.

   எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தின் சந்தை விலையானது 200ரூ என்று எடுத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் பங்குதாரர்களுக்கு கொடுத்த டிவிடெண்ட் (Dividend) ஆனது 20ரூ என்று எடுத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) ஆனது 10%. ஆகும்.

அதாவது, இந்த நிறுவனமானது தன்னுடைய சந்தை விலையில் 10% சதவீதத்தை தன்னுடைய நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக (Dividend) கொடுத்துள்ளது.


டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) கணக்கிடுவது எப்படி?

ஒரு நிறுவனத்தின் டிவிடெண்ட் 
(Dividend) அந்த நிறுவனத்தின் சந்தை விலை (Market price) ஆல் வகுத்தால் நமக்கு கிடைப்பது டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) ஆகும்

டிவிடெண்ட் 
(Dividend)
      20
----------------- = 0.1 = 10% டிவிடெண்ட் ஈல்டு
     200                                    (Dividend Yield)
சந்தை விலை 
(Market price)
   

டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) பயன்பாடு?

   நாம் முன்பு சொன்னது போல டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) ஆனது நமக்கு ஒரு சிறந்த டிவிடெண்ட் (Dividend) தரக்கூடிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) ஆனது 10% என்று எடுத்துக்கொள்வோம். அதேபோன்று டிவிடெண்ட் தரக்கூடிய மற்றொரு நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) ஆனது 15% என்று எடுத்துக்கொள்வோம். இவ்விரு நிறுவனங்களில் 15% டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) உள்ள நிறுவனமானது குறைந்த சந்தை விலையை கொண்டுள்ளது அதனால் இந்த நிறுவனத்தில் நாம் போடும் பணத்திற்கு அதிகமான டிவிடெண்ட் (Dividend) கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  இவ்வாறு, நாம் அதிக டிவிடெண்ட் ஈல்டு (Dividend Yield) உள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நம்மால் அதிக டிவிடெண்டை பெற முடியும்.

மேலும், ஒரு நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டை (Dividend Yield) வைத்து மட்டும் நாம் ஒரு முதலீடை செய்யக்கூடாது.  
      நாம் ஒரு  நிறுவனத்தில் டிவிடெண்ட் (Dividend) பொறுத்து முதலீடு செய்ய விரும்பினால் கண்டிப்பாக  அந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டை (Dividend Yield) பார்க்க வேண்டும். 
        அதனோடு, அந்த நிறுவனத்தின் மற்ற காரணிகளும்  (PE Ratio, லாப விகிதம், கடன், EPS, சந்தை மதிப்பு,etc) சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து சரியாக உள்ளது என்றால் நாம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் .

ஒப்பிட்டு பார்த்து,
ஒழுங்கான முதலீட்டை,
ஒழுங்காக செய்வோம்...

மேலும், YouTube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.