PE Ratio meaning in Tamil • Stock market • Formula and Full form • Stock Trading Ratio • Tneguys

 நாம் பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும் போது அதனை சரியான விலையில் வாங்க வேண்டும். ஏனெனில் சிறந்த நிறுவனமாகவே இருந்தாலும் அதனை அதிகம்  பணம் கொடுத்து வாங்கினால் அது நமக்கு நஷ்டமாகவே இருக்கும்.

ஒரு நிறுவனத்துடைய பங்கின் சரியா விலையை தெரிந்து கொள்வதற்கு PE Ratio நமக்கு பயன்படும்.

     இன்று, நாம் PE Ratio  என்றால் என்ன? PE Ratio -வை கணக்கிடுவது எப்படி? மற்றும் PE Ratio -வின் பயன்பாடுகள் என்ன? என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


PE Ratio என்றால் என்ன?

 ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய சந்தை விலையானது (Current Market Price) அந்த ஒரு பங்கின் லாபத்தை (Earn Per Share - EPS) போல் எத்தனை மடங்காக இருக்கிறது என்பதே அந்த நிறுவனத்தின் PE Ratio ஆகும்.

எடுத்துக்காட்டாக,  ஒரு நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலையானது (Current Market price) 10ரூ என்று எடுத்துக்கொண்டு, அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு சம்பாதித்த லாபம் (EPS) 2ரூ என்று எடுத்துக்கொண்டால். அந்த நிறுவனத்தின் PE Ratio-வானது 5 ஆகும். 

      அதாவது, அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் லாபத்தை போல அந்த நிறுவனத்தின் ஒரு  பங்கின் தற்போதைய சந்தை விலையானது ஐந்து மடங்காக உள்ளது.   

 நாம் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்க, அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் லாபத்தை போல ஐந்து மடங்கு பணம் கொடுக்க வேண்டும்.

PE Ratio கணக்கிடுவது எப்படி?

    கீழே உள்ள சூத்திரத்தை (Formula) பயன்படுத்தி நம்மால் ஒரு நிறுவனத்தின் PE -Ratio வை  கணக்கிட முடியும்.

    ... PE Ratio - Price to Earning Ratio...

  ஒரு பங்கின் தற்போதைய                                        சந்தை விலை                                         (current MARKET PRICE)                                         ------------------------------------  =     PE Ratio                  ஒரு பங்கு  ஈட்டிய லாபம்                                        (Earn Per Share - EPS) 

  எடுத்துக்காட்டு,    

              10                                                                             ----------- = 5    ( PE Ratio )                          
             2

PE Ratio பயன்பாடு?  

  PE Ratio வைத்து நாம் ஒரு நிறுவன பங்கின் சந்தை விலையானது சரியானதாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

 ஒரு நிறுவனத்திற்கு PE Ratio -வானது அதிகமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் சந்தை விலையும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். குறைவாக இருந்தால் அதன் சந்தை விலையும் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

       இதனை பயன்படுத்தி, ஒரே துறையை சேர்ந்த இரு வேறு நிறுவனங்களின் PE Ratio -வை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் நம்மால்  சரியான விலையில் உள்ள ஒரு நிறுவனத்தை தெரிந்து கொள்ள  முடியும்.


எடுத்துக்காட்டாக,

           ஒரு நிறுவனத்தின் PE Ratio - 10 

அதேபோன்ற, வேற நிறுவனத்தின்                                                                 PE  Ratio - 15

மேற்கண்டவற்றில், முதலில் உள்ள நிறுவனம் குறைந்த PE Ratio  கொண்டுள்ளது. அதனால் அதன் சந்தை விலையும்  (Market Price) குறைவாக இருக்கும். அதனால் அந்த நிறுவனத்தின் மற்ற காரணிகளும் சரியாக இருந்தால் அந்த நிறுவனத்தை நாம் வாங்கலாம்.

         மற்றொரு முறை, அந்த  நிறுவனம் சார்ந்த துறையின் PE Ratio -வை அந்த நிறுவனத்தின் PE Ratio -வுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலமும் நம்மால் அந்த நிறுவனம் சரியான விலையை உள்ளதா என்பதை நம்மால் தெரிந்த கொள்ள முடியும்.  

 ஆனால், PE Ratio என்பது தினமும் மாறக்கூடியது. ஏனெனில், பங்கின்  சந்தை விலையும்  அதன் லாபமும்  பல காரணங்களால் மாறக்கூடியது. அதனால், PE Ratio -வும் கண்டிப்பாக மாறக்கூடியது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒன்று, PE Ratio என்பது ஒரு பங்கை தேர்ந்தெடுப்பதற்கு பயன்படும் ஒரு காரணி மட்டுமே.                                              இதை வைத்து மட்டும் நாம் ஒரு பங்கை தேர்ந்தெடுப்பது சரியான முறையாக இருக்காது.

.... சரியான விலையில் 

    சரியான பங்குகளை

    சரியாக வாங்குவோம் ....


மேலும், எளிமையாக YouTube வழியாக அறிய,




Powered by Blogger.