What Is BLUE CHIP ?? • BLUE CHIP Companies • BLUE CHIP Fund • In TAMIL • TNEGUYS

  நாம் முதலீடு செய்ய சிறந்த முதலீட்டை தேடும் பொழுது  BLUE CHIP FUND என்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். 

   சாதாரண நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், BLUE CHIP நிறுவனம் என்பது நமக்கு சற்று வித்தியாசமாக இருக்கும்.   



 இன்று, நாம் BLUE CHIP  நிறுவனம் மற்றும் BLUE CHIP FUND என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


முதலில், BLUE CHIP என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

 வெளிநாடுகளில் POKER என்ற விளையாட்டு விளையாடுவார்கள் அந்த விளையாட்டில் பல்வேறு நிறங்கள் கொண்ட CHIP-கள் இருக்கும். அதில் ஊதா நிற CHIP (BLUE CHIP) அதிகமான மதிப்பு மிக்கதாக இருக்கும். 

      ஒருவர் அந்த POKER விளையாட்டையும் பங்குச் சந்தையும் ஒப்பிட்டு இந்த விளையாட்டில் அதிக மதிப்புமிக்கது BLUE CHIP  அதேபோன்று பங்குச் சந்தையில் அதிக மதிப்புமிக்க நிறுவனத்தை அவர் BLUE CHIP நிறுவனம் என்று அழைத்திருக்கிறார் இதிலிருந்துதான்  BLUE CHIP  என்ற பெயர் வந்துள்ளது.


 அடுத்ததாக, BLUE CHIP நிறுவனங்கள் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். 

   ஒரு நிறுவனம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை பெற்று இருக்குமேயானால் அது   BLUE CHIP நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.

• சிறந்த சந்தை மதிப்பு மற்றும் சந்தையில் சிறந்த நிறுவனம் என்ற பெயர் பெற்றிருக்கும்.

• பெரும்பாலும் இந்த நிறுவனங்கள்  LARGE CAP நிறுவனங்களாகவே இருக்கும்

• இந்த நிறுவனத்தில் பண புழக்கம்   (CASH FLOW)  மிகவும் சிறப்பாக     இருக்கும். 

• இந்த நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை அதிக இடங்களில் விரிவுபடுத்தி இருக்கும். 

• நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட இந்த நிறுவனம் சிறந்த லாபத்தை ஈட்டும் நிறுவனமாக இருக்கும்.

• இந்த நிறுவனம் கடன் என்பதை குறைவாகவும் அல்லது முற்றிலுமாக இல்லாமல் வைத்திருக்கும்.

• இந்த நிறுவனங்கள் டிவிடெண்ட் (DIVIDEND)  கொடுப்பதில் சிறப்பாக இருக்கும்‌. மேலும், இந்நிறுவனத்தின் DIVIDEND YIELD என்பதும் சரியான நிலையில் இருக்கும்.

• இந்த நிறுவனம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்க கூடிய திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும்.

• மேலும், இந்த நிறுவனம் மிகவும் நீண்ட பாரம்பரியம் கொண்ட  நிறுவனமாகவும், தான் இருக்கும் துறையில் அதிக அனுபவம் கொண்ட நிறுவனமாக இருக்கும்.

• இந்த நிறுவனங்கள் தான் இருக்கும் துறையில் முதன்மை நிறுவனமாக இருப்பது மட்டுமல்லாமல், அந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிறுவனமாகவும்  இருக்கும்.    

     இந்த BLUE CHIP நிறுவனங்களில் நாம் முதலீடு செய்வதால் நம்முடைய பணத்தை இழக்கும் அபாயமானது (RISK) குறைவாக இருக்கும்.

 ஏனெனில், இந்நிறுவனங்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து நிறுவனத்தை மீண்டும் வெற்றிபாதைக்கு  கொண்டு வரக்கூடிய திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும்.

  அதனால், இந்த நிறுவனங்கள் மீது நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

   ஆனால், இந்த நிறுவனம் நமக்கு சாதாரணமாக மற்ற நிறுவனங்கள் தரக்கூடிய வருமானத்தை  தான் கொடுக்கும்.

    அதிக RISK எடுக்க விரும்பாதவர்கள் இது போன்ற நிறுவனங்களின் முதலீடு செய்யலாம்.  

   ஆனால், பங்குச் சந்தையில் எப்போதும் இருக்கக்கூடிய RISK-கானது அனைத்து வகை  நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


இறுதியாக, BLUE CHIP FUND என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

நாம் மேலே, BLUE CHIP  நிறுவனங்கள் பற்றி பார்த்தோம்.  அந்த BLUE CHIP  நிறுவனங்களை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்படும்  FUND -ஆனது   BLUECHIP FUND என்று அழைக்கப்படுகிறது. 


.....எதில் முதலீடு செய்தாலும் முழுவதுமாக புரிந்து, தெரிந்து முதலீடு செய்வோம்....


மேலும், YouTube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.