BANK INFLATION In TAMIL • BANK SAVINGS INTEREST RATES • TNEGUYS

 நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு கண்டிப்பாக வைத்திருப்போம். அதனை நாம் நம்முடைய பணத்தை பாதுகாக்கவும், மற்ற தேவைகளுக்காகவும், சேமிப்பதற்கும்  பயன்படுத்துவோம்.

 


ஆனால், நம்முடைய வங்கி நம்முடைய பணத்தை உண்மையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறதா அல்லது பணவீக்கம் என்ற திருடனிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றி நமக்கு தெரியாது. ஆம் நம்முடைய பணமானது பணவீக்கத்தின் காரணமாக தன்னுடைய மதிப்பை இழந்து வருகிறது.

நம்முடைய வங்கியானது நமக்கு பணவீக்கத்தை தாண்டிய வட்டி விகிதத்தைத்  தருமேயானால் அது நம்முடைய பணத்தை அதிகரிக்கிறது மற்றும் அதனை பாதுகாத்து வைத்து இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

 மாறாக, அது நம்முடைய பணவீக்கத்திற்கு குறைவான வட்டி விகிதத்தை நமக்கு  தருமேயானால் அது நம்முடைய பணத்தின்  மதிப்பை குறைத்து  கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

 கீழே நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வங்கிகளின் வட்டி விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்கள் வங்கி உங்களுடைய பணத்தை அதிகரிக்கிறதா அல்லது குறைந்து கொண்டிருக்கிறதா என்பது பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்.

வங்கி -    வட்டி விகிதம்  -  Min. Deposit     

                             

 மேலும் , YesBank  வட்டி விகிதம்   4 -  5.5% 

எடுத்துக்காட்டாக, நம்முடைய பணவீக்கமானது சராசரியாக 6% என்று எடுத்துக் கொண்டால் மேற்கண்ட வங்கிகளில் பல வங்கிகள் நம்முடைய பணத்தை குறைத்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது.

அதனால், நம்முடைய தேவைக்கான பணத்தை மட்டும் வங்கியில் வைத்துவிட்டு மற்ற பணத்தை நாம் பணவீக்கத்தை தாண்டி வருமானம் தரக்கூடிய முதலீட்டு வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

 இவ்வாறு செய்தால் நாம் நம்முடைய பணத்தை பணவீக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சரியான முதலீடு செய்வோம்...  நம்முடைய பணத்தை பணவீக்கத்தில் இருந்து பாதுகாப்போம்...

மேலும் YouTube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.