3 Money investing tips in Tamil • Best investment ideas • Investing Strategy • investment plan • Tneguys

 நாம் முதலீடு செய்யும் போது செய்ய வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி நம் முதலீடு செய்தால் கண்டிப்பாக நம்மால் ஒரு சிறந்த முதலீட்டை  செய்ய முடியும்.



1.அடிப்படைத் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்...

நாம் முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டை பற்றிய அடிப்படை தகவல்களை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாம் எந்த முதலீடு செய்யப் போகிறோம், எவ்வளவு செய்யப் போகிறோம், எந்த முறையைப் பின்பற்றி செய்யப் போகிறோம் என்பது போன்ற விஷயங்களை நாம் முன்னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நாம் இந்த தகவல்களை புத்தகங்கள் மூலமாகவோ அல்லது இணையம் சார்ந்த வழிகள் (YouTube,Blog,ebook,.etc) மூலமாகவும் தெரிந்து கொள்ள இயலும். இதன் மூலம் நாம் அந்த முதலீட்டை பற்றிய முழுமையான அறிவு பெற்ற பின் அந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

2.கழுகைப் போல யோசிக்க வேண்டும்..

நாம் முதலீடு செய்யும் போது எப்போதும் ஒரு கழுகைப் போல யோசிக்க வேண்டும்  கோழியைப் போன்று யோசிக்கக்கூடாது.

 ஏனெனில் கோழியானது பல இடங்களில் கிளறி தனக்கான இறையை உண்ணும். ஆனால் கழுகானது எத்தனை தூரத்தில் இருந்தாலும் தனக்கான இறையை துல்லியமாக பார்த்து அந்த இறையை சரியாக உண்ணும். 

அதுபோல நாமும்  தெரியாத பல இடங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து நமக்குத் தெரிந்த முதலீட்டை துல்லியமாக செய்ய வேண்டும்.

3.தெரியாத, தேவையற்ற முதலீடுகள் வேண்டாம்..

நாம் முதலீடு மேற்கொள்ளும் போது நமக்குத் தெரியாத,தேவையற்ற முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

நமக்குத் தெரிந்தவர்கள் பலர் நமக்குத் தெரியாத முதலீட்டை செய்யுமாறு கூறுவார்கள். மேலும், அந்த முதலீட்டில் பல மடங்கு லாபம் வருகிறது என்று கூறுவார்கள்.

 இதுபோன்ற பல ஏமாற்று வேலைகள் பலரால் செய்யப்படுகிறது. அதனால் இதுபோன்ற தெரியாத, தேவையற்ற முதலீடுகளில் முதலீடு செய்வதை தைரியமாக வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

 உங்களுக்குத் தெரியாத முதலீட்டில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் முதலில் அதை உங்களுக்குத் தெரிந்த முதலீடாக மாற்றங்கள். அதாவது அதனைப் பற்றிய முழு விவரங்களையும் முழு தகவல்களையும் நீங்கள் சேகரித்து சரியான முதலீடு என்று திருப்தி அடைந்தால் மட்டும் அதில் முதலீடு செய்யுங்கள்.

கண்டிப்பாக முதலீடு செய்யுங்கள் உங்களுக்கு தெரிந்த முதலீட்டு வழிகளில் மட்டும்...

மேலும் YouTube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.