How to start a Top Business Step by step in Tamil • Business start Guide • Tneguys

  நம்மில் பலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒரு தொழிலை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அதை எவ்வாறு வெற்றிகரமாக தொடங்குவது என்பது நமக்கு தெரியாது.

 இன்றைய பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க பயன்படுத்திய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  


  • முதலில் நம்மை  சுற்றி நடக்கும்  பிரச்சனையை கவனிக்க வேண்டும். அதில் அதிகமான பேர் சந்திக்கும் பிரச்சனையை தேர்ந்தெடுக்க வேண்டும்.பின்பு அந்த பிரச்சினைக்கான காரணம் மற்றும் அதனைப் பற்றிய முழு தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.

 • அதன் பிறகு அதற்கான தீர்வுகளை பட்டியல் போட வேண்டும். அந்த தீர்வுகளில் மிகவும் எளிமையான மற்றும் குறைந்த செலவில் செய்ய கூடிய தீர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 • நாம் கண்டறிந்த அந்த தீர்வை  (பொருளையோ அல்லது சேவையையோ) சோதனை அடிப்படையில் உருவாக்கி அந்தப் பிரச்சனையில் இருக்கும் நபர்களிடம் கொடுத்து அவர்களின் கருத்துகளை பெற வேண்டும். 

 • பின்பு அவர்களின் கருத்துக்கேற்ப நம்முடைய பொருளையோ அல்லது சேவையையோ மேலும் மெருகேற்றி மீண்டும் கருத்துக்களை கேட்டு பெற வேண்டும்.

 • அவர்களிடம் நம்முடைய பொருளோ சேவையோ வெற்றி பெற்ற பிறகு அதனை குறைந்த அளவில் உருவாக்கி சந்தையில் விற்பனைக்கு வைக்க வேண்டும்

 • உள்ளூர் சந்தையில் வெற்றி பெற்ற பிறகு அதனை மேலும் பெரிய அளவில் விற்பனை செய்வதற்கு முதலீட்டாளர்களின் உதவியை நாட வேண்டும். அவர்களின் உதவியோடு பெரிய அளவில் உற்பத்தி செய்து நம்முடைய தொழிலை பெரிய அளவில் உயர்த்தலாம். 

 உங்களால் ஒரு மிகப்பெரிய தொழிலை கண்டிப்பாக உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இது‌ உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக  இருக்கும்.

உங்கள் பயணம் இனிதே தொடங்கட்டும்...

Powered by Blogger.