Middle class investment in Tamil • simple Investment ideas • Tneguys

    Middle class மக்கள் எளிமையாக முதலீடு செய்வதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


      அதற்கு முன்பாக முதலீடு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 

ஒரு முதலீடு என்பது நம்முடைய பணவீக்கத்தை தாண்டி நமக்கு ஏதேனும் வருமானத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் நம்முடைய பணவீக்கத்தை சமன் செய்ய கூடியதாகவாது  இருக்க வேண்டும். அதுவே ஒரு சரியான முதலீடாகும். 

கீழே உள்ள முதலீட்டு வழிகள் நம் பணவீக்கத்தை தாண்டி நமக்கு வருமானத்தை தர கூடியவை.

1. வங்கி சேமிப்பு  (Bank Deposit)
            இன்று நம் அனைவரிடமும் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கு கண்டிப்பாக இருக்கும். நாம் அந்த வங்கி கணக்கில் பணம் வைத்திருக்கும் போது அந்த வங்கி நமக்கு குறிப்பிட்ட வட்டியைத் வருமானமாக தருகிறது. இந்த முதலீட்டை நாம் எளிதாக செய்ய முடியும்.

2. வைப்பு நிதி (Fixed Deposit)
        நம்மிடம் குறிப்பிட்ட அளவு பணம் உள்ளது அதனை நாம் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்பும் போது நமக்கு வைப்புநிதி ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வழியாக உள்ளது. இம்முறை மூலம் நம் பணவீக்கத்தை தாண்டி வருமானத்தை நம்மால் பெற முடியும்.  
        
3.பரஸ்பர நிதி (Mutual Fund)    
       இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் பரஸ்பர‌‌ நிதி திட்டத்தில் எளிமையாக முதலீடு செய்யமுடியும். இம்முறையில் நமக்கு சிறந்த வருமானம் வர அதிக வாய்ப்புள்ளது. அதனால் இது ஒரு சிறந்த மற்றும் எளிமையான முதலீட்டு முறையாக கருதப்படுகிறது.

4.பங்கு சந்தை (Share Market)
       நம்மால் இன்றைய காலகட்டத்தில் பங்குச் சந்தையில் எளிமையாக முதலீடு செய்யமுடியும்.
        நல்ல வருமானம் எதிர் பார்க்கும் அனைவரும் இம்முறையில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற முடியும்.  மேலும், இது நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற முதலீடாகவும் கருதப்படுகிறது.    
      ஆனால், இதில் எந்த அளவிற்கு வருமானத்தை பெற முடியுமோ அந்த அளவிற்கு அதிக பணம் இழக்கும் ஆபத்தும் உள்ளது. அதனால் செய்யும் முதலீட்டை கவனமாக செய்ய வேண்டும். 
      நம்மிடம் ஒரு Demat Account இருந்தால் நம்மால் எளிமையாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய முடியும்.
       இதனை பல்வேறு தரகு நிறுவனங்கள் நமக்கு வழங்குகிறது எடுத்துக்காட்டாக, Angel broking, zerotha, 5paisa.com,upstax.etc உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை நமக்கு வழங்குகிறது.

5. தங்கம் (Gold)
       தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக அனைத்து தரப்பு மக்களாலும் கருதப்படுகிறது. மேலும் இது ஒரு சிறந்த முதலீடாக நடுத்தர மக்கள் கருதுகின்றனர். 
 மேற்சொன்னது போல் முதலீடு என்பது நமக்கு நம்முடைய பணவீக்கத்தை தாண்டிய ஏதேனும் வருமானத்தை தரவேண்டும் அல்லது நம்முடைய பணவீக்கத்தை சமன் செய்ய வேண்டும். தங்கம் எந்தவிதமான வருமானத்தையும்  நமக்கு தராது. ஆனால் தங்கமானது நம்முடைய பணத்தின் மதிப்பை தக்கவைக்கும். நம்முடைய பணத்திற்கான மதிப்பு குறையும் ஆனால் தங்கத்திற்கான மதிப்பானது குறையாது. அதனால் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக பரவலாக கருதப்படுகிறது

மேற்கண்ட வழிகளில் நம் அனைவராலும்  முதலீடு செய்ய முடியும்.

ஆனால் அதற்கு முன்பாக, (Invest Yourself)
முதலில் நீங்கள் உங்கள் மீது முதலீடு செய்யுங்கள்... 
   நேரத்தை உங்கள் அறிவை வளர்க்க முதலீடு செய்யுங்கள்.....
    நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முதலீடு செய்யுங்கள்....
    
     .... இன்றே முதலீடு செய்யுங்கள் உங்களுக்காகவும் உங்கள் எதிர்காலத்திற்காகவும் ....

மேலும் youtube வழியாக அறிய,



Powered by Blogger.