Compound Effect in Tamil • Compounding• Snow Ball Effect • Tneguys

 நாம் ஒரு முதலீடு செய்தால் அது நமக்கு ஒரு வருமானத்தை கொடுக்கும் அடுத்ததாக அந்த வருமானமும் நம் முதலீடோடு சேர்ந்து மீண்டும் நமக்கு  முன்பைவிட ஒரு  கூடுதல் வருமானத்தை கொடுக்கும்.

 இவ்வாறு நம் முதலீடோடு  வருமானமும் சேர்ந்து மீண்டும் நமக்கு கூடுதல் வருமானத்தை தரும் செயல் முறையே COMPOUNDING  (கூட்டு வட்டி முறை) ஆகும்.

இதனை உலகின் எட்டாவது அதிசயம் என ஐன்ஸ்டீன் வர்ணிக்கிறார்.


மேலும், இதற்கு Snow Ball Effect என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது ஒரு சிறிய பனி பந்தானது மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி உருட்டப்படும் போது அது சிறிது சிறிதாக பெரிதாக மாறி கீழ் வரும் பொழுது அது மிகப்பெரிய பனி பந்தாக மாறி வருகிறது. அதனைப் போன்று நம்முடைய பணமானது சிறிது சிறிதாக அதிகரித்து பெரிய அளவில் மாறுவதால் இதனை இவ்வாறு அழைக்கின்றார்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் சிறிய முதலீடு பிற்காலத்தில் பெரிய அளவில் உயரும்.

10,000 ரூபாய் முதலீடானது  10 % வட்டி விகிதத்தில் அதிகரிக்கும் ‌விதம்   கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




10,000 ரூபாய் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் இவ்வளவு உயர்கிறது என்றால் நீங்கள்  இதை விட அதிகமான‌ வட்டி விகிதம் மற்றும் அதிகமாக தொடர்ச்சியாக முதலீடு செய்து நீண்ட காலம் காத்திருந்தால் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது பற்றி சிந்தியுங்கள். COMPOUNDING உலகின் எட்டாவது அதிசயம் என்பது உண்மை தான். 

வாரன் பஃபெட் முதலீடு செய்வதன் மூலமே மிகப்பெரிய பணக்காரர்  ஆனார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் இளம் வயதிலேயே முதலீடு செய்ய தொடங்குங்கள். ஏனெனில் நேரத்தை பொறுத்தே உங்கள் பணமானது உயரும். 

 இன்று நல்ல முதலீடு செய்ய தொடங்குங்கள்....



Powered by Blogger.