How to select a best Mutual Fund • Tamil • Tneguys

 ஒரு பரஸ்பர நிதி திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



1.நாம் எந்த காரணத்திற்காக (Reason) முதலீடு  செய்கிறோம் மற்றும் அது நீண்டகால முதலீடா அல்லது குறுகிய கால முதலீடா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

2. நம்மால் எந்த அளவுக்கான (RISK) நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3. நாம் தேர்ந்தெடுக்கும் பரஸ்பர நிதியின் வெளியேற்ற செலவு (Exit Load) எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

4. மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் பரஸ்பர நிதியின் செலவீனம் (Expanse Ratio) எவ்வளவு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

5. நம்முடைய பரஸ்பர நிதியின் நிதி நிர்வாகி (Fund Manager) யார் மற்றும் அவரது துறைசார்ந்த அறிவு எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்து வேண்டும்.

6. ஒரு பரஸ்பர நிதியை தேர்ந்தெடுக்கும் முன் அதன் முந்தைய செயல்பாடுகள் (Performance) எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

7. நாம் எந்த மாதிரியான முதலீடு செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு முறை முழுவதுமாக முதலீடு (Lump-sum) செய்வதா அல்லது சிறிது சிறிதாக (SIP) முதலீடு செய்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மேற்கண்டவற்றை பயன்படுத்தி ஒரு பரஸ்பர நிதியை தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கு சிறந்த முதலீடாக இருக்கும்.

மேலும் YouTube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.