What is Dividend in Share Market In Tamil • Dividend Meaning • Tneguys

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களில் ஒன்று டிவிடெண்ட் (Dividend).

இன்று, நாம் டிவிடெண்ட் (Dividend)  என்றால் என்ன? என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

டிவிடெண்ட் (Dividend)  என்பதை எளிமையாக கூறினால் லாபத்தில் ஒரு பங்கு எனலாம். அதாவது, ஒரு நிறுவனத்தின் லாபத்தில் (Company's profit) அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கக்கூடிய பங்குதாரர்களுக்கு (Share Holders) ஒரு பங்கு.

நாம் பங்குச் சந்தையில் (Share Market) ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கி வைத்திருந்தால் நாம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்  (Share Holder) என்று அர்த்தம்.

 ஒரு நிறுவனம் லாபத்தை (Profit) ஈட்டியிருக்கிறது என்றால் அதனை அந்த நிறுவனம் ஏதேனும் புதிய முதலீடு (New Investment),  நிறுவனத்தின் உள்கட்டமைப்பு (Infrastructure), நிறுவனத்தின் விரிவாக்கம் (Company Expansion) மற்றும் நிறுவனத்தின் மதிப்பை (Company Value) அதிகரிப்பது போன்றவற்றிற்காக பயன்படுத்தும்.   இவ்வாறு, செலவு செய்தது போக மீதமிருக்கும் லாபம் அல்லது இது போன்ற செயல்கள் தற்போது நம் நிறுவனத்திற்கு தேவையில்லை என்று அந்த நிறுவனம் எண்ணினால் (தற்போது நிறுவனம் சிறந்த நிலையில் உள்ளது புதியதாக ஏதும் தேவையில்லை)  அந்த லாபத்தை அந்த நிறுவனம் டிவிடெண்டாக (Dividend) பங்குதாரர்களுக்கு கொடுக்கும். 

 இதனை அந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு (BOD - Board Of Directors) கலந்து யோசித்து முடிவு செய்வார்கள். இதனை முழுவதுமாக நிறுவனம் மட்டுமே முடிவு செய்யும். இந்த டிவிடெண்டை நிறுவனங்கள் பணமாகவோ அல்லது பங்குகளாகவோ நமக்கு தரும்.

மேலும், ஒரு நிறுவனம் கண்டிப்பாக டிவிடெண்ட் தர வேண்டும் என்று அவசியம் இல்லை.

டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் பணத்திற்கு வரி விலக்கும் (Tax Free)  உண்டு.

நாம் பங்குச் சந்தை முதலீடு செய்த பிறகு நமக்கு சிறிய வருமானம் வர வேண்டும் என்று விரும்பினால் இது போன்ற டிவிடெண்ட் தரக்கூடிய நிறுவனத்தை நாம் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

... முதலீடை தெளிவாக தெரிந்து தேர்வு செய்வோம்..


Powered by Blogger.