டிவிடெண்ட் நாட்கள் • Dividend Announcement Date , Record Date, Ex dividend Date • Explained in Tamil • Tneguys

  நமக்கு டிவிடெண்ட் வேண்டுமெனில் நாம் சில நாட்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவை தெரிந்தால் தான் நமக்கு எப்போது? எவ்வளவு? டிவிடெண்ட் கிடைக்கும்‌ என்பது பற்றி தெரியவரும். இன்று நாம் டிவிடெண்டில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று நாட்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

  Announcement Date (அல்லது) Declaration Date

ஒரு நிறுவனத்தின் இயக்குநர் குழு (BOD - BOARD OF DIRECTORS) கலந்து யோசித்து நம் பங்குதாரர்களுக்கு எவ்வளவு Dividend தருவது,எப்போது தருவது போன்றவற்றை முடிவு செய்வார்கள். அதன் பிறகு அதனை  அந்த நிறுவனம் பொதுவாக அறிவிக்கும் நாளானது Announcement Date அல்லது Declaration Date என்று அழைக்கப்படுகிறது.                   இந்த நாளில் நமக்கு எவ்வளவு டிவிடெண்ட் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.

Record Date

           இந்த நாள் மிகவும் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நாளாகும். ஏனெனில், இந்த நாளில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை நம்முடைய Demat Account-ல் வைத்திருந்தால் மட்டுமே நமக்கு அந்த நிறுவனம் தரும் dividend கிடைக்கும். 

           Dividend தரக்கூடிய நிறுவனம் இந்த நாளில் தான் தன்னுடைய நிறுவனத்தின் பங்குகளை யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து Dividend தர முடிவு செய்யும்.

Ex Dividend Date

            இந்த நாளுக்கு பிறகு நாம் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் அந்த நிறுவனம் தரும் dividend நமக்கு கிடைக்காது.                                                                      சில நிறுவனங்கள் இந்த Ex dividend date-ல் வாங்கினால் கூட நமக்கு டிவிடெண்ட் தர வாய்ப்புள்ளது.                                     பெரும்பாலும், இந்த Ex Dividend Date ஆனது Record Date ல் இருந்து இரண்டு நாட்கள் முன்னதாக இருக்கும்.

           இந்த மூன்று நாட்களும் Dividend- ல் முக்கியமான நாட்களாகும். இவை தவிர இன்னும் சில நாட்களும் டிவிடெண்டில் உள்ளது. 

அவற்றை பற்றி நீங்களே தேடி தெரிந்து கொள்ளுங்களேன்..

மேலும், YouTube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.