ஆயுள்‌ மற்றும் மருத்துவ காப்பீடு • Life and Health insurance Definition • Insurance is not a investment • Tneguys

  நாம் மருத்துவ காப்பீட்டின் (Medical Insurance) முக்கியத்துவம் பற்றி இதற்கு முன்பு பார்த்தோம். ஆனால்   காப்பீடு என்றாலே நமக்கு ஆயூள் காப்பீடு (Life Insurance) தான் நினைவிற்கு வரும். ஆனால், இவ்விரு காப்பீடுகளும் வேறு வேறு தேவைகளுக்காக பயன்படுத்த கூடியவை, ஒன்றுக்கொன்று  வித்தியாசமானவை.

 இன்று,‌ நாம் ஆயுள் காப்பீடு (Life insurance) மற்றும் மருத்துவ காப்பீட்டு  (Medical Insurance)  இவற்றுக்கு இடையிலான அடிப்படை வித்தியாசம் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

  மேலும் கூடுதலாக, ஒரு காப்பீட்டை  நாம் முதலீடாக  எடுத்துக் கொள்ளலாமா? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆயுள் காப்பீடு  (Life Insurance)

      ஆயுள் காப்பீடு என்பது நம்மை சார்ந்து இருக்கக்கூடிய நம் குடும்பத்தினருக்காக நாம் செய்து வைத்திருக்கக் கூடிய ஒரு காப்பீடு ஆகும்.   

 எடுத்துக்காட்டாக,  ஒரு குடும்பம் ஒருவரின் வருமானத்தையே நம்பியுள்ளது என்று எடுத்துக்கொள்வோம். வேறு எந்த வகையான நிதி சார்ந்த சொத்துகளும் அந்த குடும்பத்துக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

       இந்நிலையில், அந்த குடும்பம் அந்த ஒரு நபரை இழக்க நேர்ந்தால், அந்த  குடும்பம் மனதளவிலும், பொருளாதார ரீதியிலாக மிகவும் பாதிப்பை சந்திக்கும்.

    ஆனால், அந்த ஒருவர் ‌ஆயுள் காப்பீடு செய்து வைத்திருந்தால் அந்த குடும்பம் பொருளாதார பிரச்சினையில் இருந்து தப்பிக்கும்.   

    ஏனெனில், அந்த ஆயுள் காப்பீட்டில் அவர் செய்து வைத்திருக்கும் காப்பீட்டுத் தொகையானது அவர் குடும்பத்தினருக்கு கிடைக்கும். இதனால் அந்த குடும்பம் பணப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கும். 

    அதாவது , அவர் செய்து வைத்துள்ள ஆயுள் காப்பீடானது அவருக்கு பதிலாக காப்பீட்டுத் தொகையை அவருடைய குடும்பத்தினருக்கு கொடுக்கும். 

        இதுதான் ஒரு ஆயுள் காப்பீடு.

    

மருத்துவ காப்பீடு  (Medical Insurance) 

   மருத்துவ காப்பீடாது  ஆயுள் காப்பீட்டை போல காப்பீடு செய்து வைத்திருக்க கூடிய நபரின் குடும்பத்திற்கு பணத்தை கொடுக்காது. அதற்கு பதிலாக இந்த காப்பீடானது காப்பீட்டாளரின் மருத்துவ தேவைக்காக பயன்படும்.

      அதாவது, காப்பீடு செய்து வைத்திருக்க கூடிய நபருக்கு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, விபத்து நேர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அவரின் காப்பீட்டுத் தொகையானது அவரின் மருத்துவ  தேவைக்கு பயன்பட்டு அவரை அதிலிருந்து மீட்டெடுக்கும்.

     இதுவே ஒரு மருத்துவ காப்பீடு. 

இவ்விரண்டு காப்பீடுகளும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை இது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

காப்பீடு ஒரு முதலீடா?

 அடுத்ததாக, நாம் ஒரு காப்பீட்டை  முதலீடாக எடுத்துக் கொள்ளலாமா? என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

     ஒரு  காப்பீடு (Insurance) என்பது ஒரு பொழுதும்‌ ஒரு முதலீடு (Investment) ஆகாது.  ஏனெனில், ஒரு காப்பீடு மற்றும் ஒரு முதலீடு என்பது வேறு வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி  செய்கின்றன. 

     நாம் இவை இரண்டையும் ஒன்றாக எண்ணினால் நாம் ஒரு தவறான காப்பீடையோ அல்லது ஒரு தவறான முதலீட்டையோ தேர்ந்தெடுக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

முதலில், ஒரு காப்பீடானது நமக்காகவும் நம்முடைய எதிர்கால பாதுகாப்பிற்காகவும் நாம் செய்யக்கூடிய ஒன்றாகும். அதாவது, நாம் கண்டிப்பாக செய்யக் கூடிய மருத்துவ செலவு,பொருளாதார தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக  செய்யக்கூடியதாகும்.

ஆனால், ஒரு முதலீடு என்பது நம்முடைய பணத்தை பணவீக்கத்தில் (Inflation) இருந்து பாதுகாப்பதற்காகவும் அதனை  அதிகரிப்பதற்காகவும் நாம் செய்யக் கூடிய ஒன்றாகும். இதன் தேவை வேறு அதன் தேவை வேறு. அதனால், காப்பீடும் முதலீடும் ஒன்று என்று எண்ணி அதனை செய்யாதீர்கள்.

மேலும், ஒரு காப்பீடு அல்லது ஒரு முதலீட்டை செய்யும் போது அது அதுக்கு தேவையான காரணிகளை பார்த்து  தேர்வு செய்யுங்கள்.  அவ்வாறு, செய்தால் நம்மால் ஒரு நல்ல காப்பிட்டையும் நல்ல முதலீட்டையும் செய்ய முடியும். 

இன்று, கொஞ்சம் அதிகம் தான். ஆனால்  உங்களுக்கு‌ புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.


காப்பீடும் செய்வோம்....                                      முதலீடும் செய்வோம்....

Youtube வழியாக தகவல்களை அறிய,



Powered by Blogger.