விதியை மாற்று பணக்காரர் ஆகு ! • 50/30/20 Budget Rule in TAMIL • Tneguys

 நாம் ஒரு பணக்காரர் ஆவதற்கு   பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த பணத்தை சரியாக கையாளுவதும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் பணத்தை சம்பதிப்பதை விட பணத்தை கையாள்வது (Money Management)  மிகவும் முக்கியம்.

இன்று, நாம் நம்முடைய பணத்தை கையாளுவதற்கான ஒரு விதியைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


50 30 20  விதி (Rule). ஆமாங்க, இந்த விதியோட பெயர் இதுதான்.

நாம் ஏதேனும்  வேலை செய்தோ அல்லது தொழில் செய்தோ வருமானத்தை ஈட்டிக் கொண்டிருப்போம். இந்த விதிப்படி, நாம் அந்த வருமானத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது, 50%, 30% மற்றும் 20% மாக பிரித்து கொள்ள வேண்டும்.

    முதல் பகுதியான, 50 சதவீதத்தை  அதாவது நம்முடைய வருமானத்தில் பாதியை இந்த விதிப்படி, நாம் நம்முடைய அத்தியாவசியத் தேவைகளுக்காக (Needs) பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதாவது, நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய செலவுகளான நம்முடைய உணவு (Food), உடை (Dress), இருப்பிடம் (Rent) மருத்துவம் (Medicine) உள்ளிட்ட தேவைகள்.

     அடுத்ததாக உள்ள, 30 சதவீதத்தை நாம் நம்முடைய ஆசைகளுக்காக (Wants)  பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  எடுத்துக்காட்டாக, சுற்றுலா செல்வது‌‌ (Travel), திரைப்படம் பார்ப்பது‌ (Watching Movies),  நமக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொள்வது (Shopping) ஆகியவற்றைச் சொல்லலாம்.

     கடைசியாக உள்ள, 20 சதவீதத்தை  நாம் இந்த விதிப்படி கண்டிப்பாக சேமிக்க  (Save)  வேண்டும். சேமிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை கண்டிப்பாக முதலீடு (Invest) செய்ய வேண்டும். இல்லையெனில், அது பணவீக்கத்தின் (Inflation) காரணமாக காணாமல் போகிவிடும்.  அதனால் சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும்.

இங்கு, நாம் இந்த 20 சதவீதத்தை கடைசியாக பார்த்தாலும் இதையே நாம்  நம்முடைய வருமானத்தில் முதலில் செய்ய வேண்டும்.

இந்த விதிப்படி, நாம் நம்முடைய பணத்தை ஒழுங்காகவும் தொடர்ச்சியாகவும்  கையாண்டு வந்தால், கண்டிப்பாக கூடிய விரைவில் நாம் ஒரு பணக்காரர் ஆகி விடுவோம்.

அதிக செலவும் வேண்டாம்! கஞ்சத்தனமும் வேண்டாம்!

     நம்மில் பலர் இப்படித்தான் இருப்போம். செலவு செய்தால் நம்மிடம் உள்ள அனைத்து பணத்தையும் செலவு செய்து விடுவோம். அதுபோல் சேமிப்பு என்றால்  மிகவும் கஞ்சத்தனமாக இருப்போம்.

எடுத்துக்காட்டை,  நாம்  மேலே பார்த்த விதியை வைத்தே பார்ப்போம். இந்த விதியில் 50 சதவீதத்தை நாம் கண்டிப்பாக செலவு செய்து விடுவோம். 

அடுத்ததாக உள்ள, 30 சதவீதத்தை நாம் நம்முடைய விருப்பங்களுக்கு செலவழிப்பதற்கு பதிலா கஞ்சத்தனமாக அதனை சேமிக்க வேண்டும் என்று எண்ணுவோம்.

அதேபோல அடுத்ததாக, நாம் சேமிக்க வேண்டிய  20 சதவீதத்தை நாம் சேமிக்காமல் செலவு செய்து விடுவோம் என்று எண்ணுவோம்.
 இவ்வாறெல்லாம் நாம்  யோசிக்க கூடாது.

சரியாக செலவும் செய்ய வேண்டும், சரியாக  சேமிப்பையும் செய்ய வேண்டும்,  இவ்வாறு செய்தால் நாம் பணம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்தும் விடுவோம். கூடிய விரைவில் பணக்காராகவும் ஆகி விடுவோம்.

இறுதியாக,  தலைப்பை சொல்லியே முடிப்போம்.

விதியை மாற்று  
         பணக்காரர் ஆகு...

வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,


Powered by Blogger.