சிறிய செயல் ! பெரிய மாற்றம்! • 80 20 rule in Tamil • Pareto principle • Tneguys

  நம்  வாழ்கையில் நிகழும் பெரிய மாற்றங்கள் நாம் செய்யக்கூடிய சிறிய செயல்களால் ஏற்படுகின்றன.     இன்று, நாம் இது தொடர்பான ஒரு விதியை பற்றிதான் தெரிந்து கொள்ள போகிறோம்.


      இந்த விதியின் பெயர் 80/20 விதி (80/20 Rule). 

அதாவது இந்த விதி,  80% விளைவுகளுக்கு காரணம்  20% செயல்கள் தான் என்கிறது.

 இதனை பரேட்டோ (Vilfredo Federico Damaso Pareto) என்பவர் தான் கண்டறிந்தார். அதனால் தான்  இதற்கு பரேட்டோ விதி (Pareto Principle) என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

இவர் உலகத்தின் பொருளாதாரம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது , உலகத்தில் 20% மக்கள் தான் உலகத்தின் 80% செல்வத்தை வைத்துள்ளானர் என்பதை கண்டறிந்தார்.

அதே போல், அவருடைய பட்டாணி செடிகளில் 20% பட்டாணி செடிகள் தான்‌ 80% பட்டாணியை கொடுக்கிறது என்பதையும் கண்டறிந்தார்.

இது போல, ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 80% லாபம் அந்த நிறுவனத்தின் 20% வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது.

இது போல பலவற்றில் அவர் இதை சோதித்து பார்க்கும் போது  பெரும்பாலானவற்றில் இது பொதுவாக இருப்பதை அறிந்து கொண்டார்.

இதன் பிறகு அவர் ஒரு விதியை சொல்கிறார். அது தான் 80 20 விதி அல்லது பரேட்டோ விதி.

 இந்த விதியைப் நாம் சரியாக பயன்படுத்தினால் நம்மால் ஒரு சாதனையாளர் ஆக முடியும்.

எடுத்துக்காட்டாக, நாம் மிகவும் கவலையில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இந்த கவலைக்கு 10 பிரச்சினைகள் காரணம் என்று வைத்துக்கொள்வோம். இதில் 2 (20%) பிரச்சினைகள் தான் நம்முடைய 80% கவலைக்கு காரணமாக இருக்கும். அந்த 2 பிரச்சினைகளை கண்டறிந்து சரி செய்தால் நம்முடைய முக்கால்வாசி கவலை தீர்ந்து விடும்.                            அதன் பிறகு மிதமிருக்கும் பிரச்சினைகளில் மீண்டும் அதிக கவலையை நமக்கு ஏற்படுத்தும் பிரச்சனையை கண்டறிந்து  முன்பு போல் அதனை சரி செய்தால் நாம் நம்முடைய கவலையை முற்றிலும் சரி செய்து விடலாம். 

இதனை நாம் நம்முடைய வேலை, தொழில் போன்ற எல்லாவற்றிலும் எல்லா வகையிலும் பயன்படுத்தினால் நம்மால் அவற்றிலும் வெற்றி பெற முடியும். பெரிய அளவில் சாதித்த  பெரும்பாலானோர் இந்த 80/20 விதி பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

 ...நாமும்     இந்த 

   80/20 விதியை 

   நம் வாழ்வில்

   பயன்படுத்தி   

   வெற்றி பெறுவோம்...

வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,

Powered by Blogger.