ஒரு ETF ! பல முதலீடு !! • ETF Investing in Tamil • Exchange Traded Fund • Nifty Bees • Tneguys

     இன்றைய காலகட்டத்தில் நம்மிடையே பல  வகையான முதலீட்டு வழிகள் உள்ளது. அவற்றில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் நமக்கு அதிகமான லாபம் தரக்கூடிய ஒரு முதலீட்டு வழியாக உள்ளது. அதில் எந்த அளவிற்கு லாபம் உள்ளதோ அதே அளவிற்கு பணம் இழக்க கூடிய  அபாயமும் (Risk) உள்ளது.

 இன்று, நாம் பங்கு சந்தை சார்ந்த அதே நேரத்தில் சற்று Risk குறைவான ஒரு முதலீட்டு முறையை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

     பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு பல வகையான வழிகள் உள்ளது. அதில் ஒன்றுதான் ETF (Exchange Traded Fund).

இந்த ETF என்பது பங்குச் சந்தையில் உள்ள குறியீடுகள் (INDEX) சார்ந்த ஒரு முதலீட்டு முறையாகும். பங்குச் சந்தையில் பல வகையான குறியீடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, NIFTY (நிப்டி),Sensex (சென்செக்ஸ்), NIFTY 50, NIFTY BANK., உள்ளிட்டவற்றை கூறலாம்.

இது போன்ற குறியீடுகளில் (INDEX) அந்த குறியீடு சார்ந்த நிறுவனங்கள்  இடம்பெற்றிருக்கும். மேலும், அந்த நிறுவனங்கள் தன்னுடைய சந்தை மதிப்பைப் பொறுத்து அந்த குறியீட்டில் ஒரு பங்களிப்பை கொடுக்கும். அவைகளின் பங்களிப்பை பொருத்து அந்தந்த நிறுவனங்களின் முதலீடானது செய்யப்படும். இது அப்படியே அந்த குறிப்பிட்ட குறியீட்டை (INDEX) பிரதிபலிப்பதாக இருக்கும்.

 எடுத்துக்காட்டாக, Nifty 50 என்பது பங்குச் சந்தையில் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீட்டில் தேசிய பங்குச் சந்தையில் (NSE) உள்ள முதல்தர 50 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கும். மேலே சொன்னது போல, இந்த நிறுவனங்கள் தன்னுடைய சந்தை மதிப்பைப் பொருத்து இந்த  குறியீட்டில் ஒரு பங்களிப்பை கொடுக்கும்.

 எடுத்துக்காட்டாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம் இந்த குறியீட்டில் 10% பங்களிப்பை கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். நாம் 100 ரூபாய் கொடுத்து ஒரு ETF வாங்கினால் அதில் பத்து ரூபாய் ஆனது இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலீடு செய்யப்பட்டிருக்கும்.

  இது போன்றே, மற்ற நிறுவனங்கள் அந்த குறியீட்டில் கொடுக்கும் பங்களிப்பை பொருத்து அந்த நிறுவனங்களில் முதலீடானது செய்யப்படும்.

ETF Vs Index Mutual Fund (குறியீட்டு பரஸ்பர நிதி)

  இதே போன்று குறியீட்டை பொறுத்து முதலீடு செய்வது என்பது நாம் முன்னரே பார்த்த ஒன்று தான். அதாவது, குறியீட்டு பரஸ்பர நிதியிலும் (Index Mutual Fund)   இதே போன்று குறியீட்டை பொறுத்து தான் முதலீடானது செய்யபடுகிறது.   

   ஆனால் ETF-ஆனாது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.  இது ஒரு நிறுவனத்தின் பங்கு (Share) செயல்படுவதைப் போல பங்குச் சந்தையில் தினமும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதனால் இதனை நாம் ஒரு பங்கை (Share) வாங்கி விற்பது போல் வாங்கி விற்கலாம். 

ஆனால், குறியீட்டு பரஸ்பர நிதி (Index Mutual Fund) ஆனது அவ்வாறு பட்டியலிடப்பட்டிருக்காது. அதே  நேரத்தில் இதனை ஒரு பரஸ்பர நிதி (Mutual Fund) நிறுவனத்தின் நிதி மேலாளர் (Fund Manager) தான் நிர்வாகிப்பார். 

 ஆனால், ETF -ஐ நாம் தான் நிர்வாகிக்கிறோம். அதனால் இதற்கான செலவீனமானது (Expense Ratio) குறியீட்டு பரஸ்பர நிதியை விட குறைவு. ஆனால், பங்குச் சந்தையில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்கை  வாங்கும் போது விற்கும் போதும் கொடுக்கும் தரகு கட்டணமானது (Brokerage) இந்த ETF -ஐ வாங்கும் போதும் விற்கும் போதும் நாம் கொடுக்க வேண்டும்.                                                   அதாவது, ஒரு குறியீட்டு பரஸ்பர நிதி (Index Mutual Fund) ஆனது ஒரு பங்கை (Stock) போல் செயல்பட்டால் அது தான் ETF (Exchange Traded Fund).

BEES என்றால் என்ன?

அடுத்ததாக, நாம் BEES என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  BEES என்பது இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான ETF ஆகும். இது முதன் முதலாக வந்த ETF என்பதால் இந்த வகை ETF-ல் பண புழக்கமானது (Liquidity) அதிகமாக  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டை                                                                          முறையாக செய்வோம்!                                        சரியாக செய்வோம்!         

வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,



Powered by Blogger.