DIRECT MUTUAL FUND and REGULAR MUTUAL FUND • Direct Plan • Regular Plan • TNEGUYS

    பொதுவாக, முதலீடு பற்றி பெரிதாக தெரியாதவர்களுக்கு  ஒரு தேர்வாகத்தான்  பரஸ்பர நிதியை  (Mutual Fund) கூறுவார்கள்.  ஆனால், அப்படிப்பட்ட ஒரு பரஸ்பர நிதியை தேர்ந்தெடுப்பதற்கும் நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று, நாம் அது சார்ந்த இரு திட்டங்கள் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது, இன்று, நாம் பரஸ்பர நிதியில் (Mutual Fund) உள்ள இரு திட்டங்களான Direct Mutual Fund மற்றும் Regular Mutual Fund பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய போகும் போது, நாம் இரண்டு வகையான திட்டங்கள் (Plan) வழியாக முதலீடு செய்யலாம். ஒன்று Regular Mutual Fund, மற்றொன்று Direct Mutual Fund. சற்று விரிவாக பார்ப்போம்...

Direct Mutual Fund (நேரடி முறை)...

Direct Mutual Fund முறையில், நாம் நமக்காக திட்டத்தை நேரடியாக பரஸ்பர நிதி திட்டத்தை (Mutual Fund Scheme) உருவாக்கும் பரஸ்பர நிதி நிறுவனத்திடம் (Mutual Fund Company) இருந்து பெறுகிறோம். 

இதனால், இதன் செலவீனம்‌ (Expanse Ratio) குறைவு. அதேபோல், இந்த வகை திட்டத்தில்  நமக்கு  முதலீடு சார்ந்த எந்தவொரு உதவியோ அறிவுரையே (Instructions) கிடைக்காது. 

மேலும், இந்த திட்டத்தில் நமக்கு ஏற்படும் லாபம் மற்றும் நட்டம் (Profit and Loss) என்பது நம்முடைய முதலீட்டு அறிவை (Investment Knowledge) பொறுத்தே அமையும்.

REGULAR Mutual Fund (இடைத்தரகர் வாயிலாக)...

REGULAR Mutual Fund திட்டத்தில் நாம் நம்முடைய பரஸ்பர நிதி திட்டத்தை  (Mutual Fund Scheme) பரஸ்பர நிதி நிறுவனத்திடம் (Mutual Fund Company) இருந்து ஒரு இடைத்தரகர் (Broker or Advisor) வழியாக பெறுகிறோம். 

   அதனால், இந்த திட்டத்தில் செலவீனம் Direct Mutual Fund- ஐ ஒப்பிடும்போது அதிகம். 

ஏனெனில். இந்த வகை திட்டத்தில் ஒரு இடைத்தரகர்  (Broker or Advisor) இருப்பதால் அவருக்கு சிறிது தரகு தொகையை (Commission Fee) பரஸ்பர நிதி நிறுவனம் கொடுக்கும். மேலும், இந்த வகை திட்டத்தில் நமக்கு முதலீடு சார்ந்த அறிவுரைகளும் (Instructions) உதவிகளும் இந்த இடைத்தரகர் வாயிலாக நமக்கு கிடைக்கும்.      


இந்த இரு திட்டங்களில் உங்களுக்கான திட்டத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பரஸ்பர நிதி முதலீடு பற்றி தெரியுமானால் நீங்கள் DIRECT MUTUAL FUND -ஐ தேர்ந்தெடுக்கலாம். முதலீடு பற்றி தெரியாதவர்கள் REGULAR MUTUAL FUND-ஐ பரிசீலிக்கலாம். 


திட்டம் பார்த்து!!

திட்டம் போடுங்கள்!!!


வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,


Powered by Blogger.