Price to book Value Ratio • Share Market • PB Ratio in Tamil • Explained • TNEGUYS

   நாம் எதை வாங்கினாலும் அதன் உண்மையான மதிப்பை அறிந்து, அதனை சரியான விலையில் வாங்க வேண்டும். உண்மையான மதிப்புக்கு மேல் பணம் கொடுத்து வாங்கினால் அது நமக்கு நஷ்டமாக தான் இருக்கும்.

இன்று, நாம் அது சார்ந்த ஒரு விகிதம் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது, இன்று நாம் P/B Ratio பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.



P/B விகிதம் (Price to Book Value Ratio)...

P/B விகிதத்தில் மேல் உள்ள P என்பது ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பை குறிக்கும்.               

அதுபோல, கீழே உள்ள B என்பது அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பை குறிக்கும். அதாவது, ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பிற்கும் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம் தான் இந்த P/B விகிதம் (Ratio).


                           Market  (சந்தை                                                               Value    மதிப்பு)

P/B RATIO =  ---------------------------------

                           Book    (புத்தக                                                               Value     மதிப்பு)


P/B விகிதம் கணக்கிடும் முறை...    

      உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200ரூ என்று எடுத்துக்கொண்டு, அதன், புத்தக மதிப்பு 100ரூ என்று எடுத்துக்கொண்டால்.           அந்த நிறுவனத்தின் P/B‌ RATIO-வானது 2.

                  

                               200

                          ----------------- = 2 (P/B Ratio)

                                100


 அதாவது, அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பை (Book Value) போல  அதன் சந்தை மதிப்பு (Market Value) இரண்டு மடங்காக உள்ளது. நாம் அந்த நிறுவனத்தை அதன் புத்தக மதிப்பை போல இரண்டு மடங்கு கொடுத்து வாங்க வேண்டும்.

P/B விகிதத்தின் பயன்பாடு...

ஒரு நிறுவனத்தின் P/B விகிதம் 1 -ஐ விட அதிகமாக இருந்தால் அதன் சந்தை மதிப்பு, அதன் புத்தக மதிப்பை விட அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

அதேபோல், ஒரு நிறுவனத்தின் P/B விகிதம் 1 -ஐ விட குறைவாக இருந்தால் அதன் சந்தை மதிப்பு, அதன் புத்தக மதிப்பை விட குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு நிறுவனத்தின் P/B விகிதம் 1-ஐ விட குறைவாக இருந்தால் அந்த நிறுவனத்தை நாம் வாங்கலாம். ஆனால், ஒரு நல்ல நிறுவனத்தை பெரும்பாலான முதலீட்டாளர்கள் வாங்க நினைப்பார்கள். அதனால், அதன் புத்தக மதிப்பை விட  சந்தை மதிப்பு அதிகமாகவே இருக்கும். அதாவது, ஒரு நல்ல நிறுவனத்தின் P/B விகிதம் 1-ஐ விட அதிகமாக இருக்கும்.

ஏதோ, ஒரு தவறான காரணத்திற்காக ஒரு நல்ல நிறுவனத்தின் P/B விகிதம் 1-ஐ விட குறைவாக இருந்தால், அதாவது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பை விட குறைவாக இருந்தால், அந்த நிறுவனத்தை நாம் தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்று, P/B விகிதம் என்பது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய காரணிகளும் (Factor) ஒரு காரணி மட்டுமே, இதனை பார்த்து மட்டும் நாம் எந்த ஒரு முதலீட்டையும் செய்ய கூடாது. 


வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,



Powered by Blogger.