Face Value , Book Value , Market Value in stock market • Example • Explaination • Tamil • TNEGUYS

 "ஆழம் தெரியாமல் காலை விடாதே" என்ற பழமொழி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல தான், நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன், அதனை பற்றிய முழுமையான தகவல் அறிந்து முதலீடு ‌செய்ய வேண்டும். 

இன்று, நாம் பங்குச் சந்தையில் மிகவும் அடிப்படையான மூன்று மதிப்புகள் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது,  முக மதிப்பு (Face Value) , புத்தக மதிப்பு (Book Value) , சந்தை மதிப்பு (Market Value) பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


முக மதிப்பு (Face Value) ....

ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது அந்த நிறுவனத்தில் அதன் நிறுவனர்கள் செய்த முதலீட்டில்  ஒரு பங்கின் மதிப்பே அந்த நிறுவனத்தின் முக மதிப்பு (Face Value) ஆகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் தொடங்கும் போது அந்த நிறுவனத்தில் 10000 ரூ முதலீடு செய்யபடுவதாக எடுத்து கொள்வோம். அந்த நிறுவனத்தை அதன் நிறுவனர்கள் 1000 பங்குகளாக பிரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால், ஒரு பங்கின் மதிப்பு 10ரூ.

இந்த 10ரூ தான் அந்த நிறுவனத்தின் முக மதிப்பு.


முதலீடு            10000ரூ

-------------  =       ----------     = 10ரூ  முக மதிப்பு

பங்கின்            1000                    (Face Value )   

எண்ணிக்கை


புத்தக மதிப்பு (Book Value)....

ஒரு நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு, அதாவது, அந்த நிறுவனத்தின் தற்போதைய  மதிப்பு, மற்ற சொத்துக்கள் ஆகியவற்றை சேர்த்து அந்த நிறுவனம் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அந்த கடனை கழித்து  மீதமிருக்கும் மதிப்பில் ஒரு பங்கிற்கான மதிப்பே அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) ஆகும்.

(நிறுவனத்தின் 

    மதிப்பு                -  (கடன்கள்)         

 + சொத்துக்கள்)                                புத்தக 

--------------------------------------------   =         மதிப்பு

 மொத்த பங்கின்                         (Book Value)

 எண்ணிக்கை  


     20000ரூ

      ----------     = 20ரூ  முக மதிப்பு                                                               (Face Value )                                     1000 


சந்தை மதிப்பு (Market Value)...

         ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்வோம். பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் தேவையை பொறுத்து அதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். இந்த மதிப்பே அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Value) ஆகும். இது தேவையை (Demand) பொறுத்து தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆழம் தெரிந்து காலை விடுவோம்..

அடிப்படை அறிந்து  முதலீடு செய்வோம்...


வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,



Powered by Blogger.