காகித தங்கம் • Gold ETF in Tamil • Paper Gold • Gold ETFs • Gold Exchange Traded Fund• TNEGUYS

       தங்கத்தை நம்மில் பலர் பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றோம். அதனால் தான் என்னவோ இந்தியாவில் தங்கமானது அதிகமாக வாங்கப்படுகிறது.

பெரும்பாலும், தங்கத்தை நாம் மூன்று காரணங்களுக்காக வாங்குவோம். அதாவது, அணிவதற்காக வாங்குவோம் அல்லது அவரச தேவைக்கு (Emergency Purpose) பயன்படுத்தி கொள்ளலாம் என்பதற்காக வாங்குவோம் அல்லது எதிர்கால தேவைக்காக (Future Usage)  வாங்கி சேமித்து வைப்போம்.                            மேலே, கூறியதில் தங்கத்தை அணிவதற்காக வாங்குவதை தவிர்த்து மற்ற இரு காரணத்துக்காக நீங்கள் தங்கத்தை வாங்குகிறார்கள் என்றால், உங்களுக்கு GOLD ETF சரியானதாக இருக்கும். 

இன்று, GOLD ETF என்றால் என்ன என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


     சாதாரணமா, நாம் ஒரு நகை கடைக்குச் சென்று தங்கம் வாங்கும்போது செய்கூலி என்பார்கள், சேதாரம் என்பார்கள், GST என்பார்கள், இது போக வாங்கிய தங்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம்முடையது தான்.                   இப்படி  வாங்கிய தங்கத்தை நம் தேவைக்காக விற்க சென்றால் பழைய நகை என்று அதன் மதிப்பை வேறு குறைந்து சொல்வார்கள்.

ஆனால், நாம் GOLD ETF  வாங்கினால் இதுபோன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. பொதுவாக GOLD ETF -ஐ காகித தங்கம் (Paper Gold) என்பார்கள். இதற்கு செய்கூலி, சேதாரம், GST போன்றவை கிடையாது.

 மேலும், GOLD ETF  நம்முடைய டீமேட்  கணக்கில் (Demat Account) தான் இருக்கும். அதனால் இதனை பாதுகாக்க வேண்டிய அவசியமும் நமக்கு கிடையாது.

GOLD ETF ஆனது தங்கத்தை (Physical Gold) பொறுத்து செயல்படுகிறது. அதாவது தங்கத்தின் (Gold) விலை உயரும் போது GOLD ETF உடைய விலையும் உயரும். அதனால் நாம் நம்முடைய தேவைக்காக இந்த GOLD ETF விற்பனை செய்ய எண்ணினால் அன்றைய தங்கத்தின் மதிப்பு (Gold Rate) பொறுத்து நாம் விற்பனை செய்து கொள்ளலாம்.

இந்த, GOLD ETF ஆனது  தங்கத்தை  (Gold) நாம்  நேரடியாக கைகளில் வாங்காமல் அந்த தங்கத்தில் முதலீடு (Invest) செய்யும் ஒரு முறையாகும்.

 ஒரு GOLD ETF -ஐ நாம் வெறும் 50 ரூபாய்க்கு கூட  வாங்கலாம். ஆம், பங்குச் சந்தையில் (Share Market) நமக்கு வெறும் 50 ரூபாய்க்கு  ஒரு GOLD ETF கிடைக்கிறது. அதனால் இதனை அனைத்து வகையான மக்களுக்களும் வாங்க இயலும். 

நாம் நம்முடைய எதிர்கால தேவைக்காகவும், நம்முடைய அவசர தேவைக்காகவும் இந்த GOLD ETF -ஐ  வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த தேவைகளை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.


அணிவதற்கு ஆபரண தங்கம் ...

முதலீட்டிற்கு காகித தங்கம்....


வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,





Powered by Blogger.