IDCW Mutual Fund VS GROWTH Mutual Fund In Tamil • TNEGUYS

      நாம் நமக்கான ஒரு பரஸ்பர நிதியை தேர்ந்தெடுக்கும் போது GROWTH  பரஸ்பர நிதி (Mutual Fund) அல்லது IDCW (DIVIDEND)  பரஸ்பர நிதியை தேர்வு செய்ய வேண்டும்.   இவை என்ன என்பது  நமக்கு தெரிந்தால் தான் இதில் எது நமக்கு  சரியானதாக இருக்கும் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.

இன்று, நாம் GROWTH  பரஸ்பர நிதி மற்றும் IDCW (DIVIDEND)  பரஸ்பர நிதியை (Mutual Fund) என்றால் என்ன? என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


     நாம் நம்முடைய முதலீட்டு பணத்தை  பெருக்க விரும்பினால் நமக்கு Growth சார்ந்த பரஸ்பர நிதி (Mutual Fund) சரியானதாக இருக்கும். அதே போல் நம்முடைய முதலீட்டில் இருந்து Dividend போன்று சிறிய வருமானம் வர வேண்டும் என்று  விரும்பினால் நமக்கு IDCW (Dividend) சார்ந்த பரஸ்பர நிதி சரியானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

GROWTH பரஸ்பர நிதி (Mutual Fund)

             GROWTH சார்ந்த பரஸ்பர நிதியில் "COMPOUND EFFECT" ஆனது செயல்படுகிறது. அதனால் நம்முடைய முதலீட்டு பணமானது காலத்தை பொறுத்து சிறிது சிறிதாக அதிகரிக்கும். காலம் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய முதலீட்டு‌ பணமும் வேகமாக அதிகரிக்கும்.

 அதனால், உங்களுடையது முதலீடு நீண்ட காலத்திற்கு உங்களுக்கு தேவைப்படாது என்னும் பட்சத்தில்  உங்களுடைய முதலீட்டு பணத்தை அதிகரிக்க இந்த Growth சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இது நம்முடைய பணத்தை காலத்தை பொறுத்து அதிகரிக்கும்.

IDCW (Dividend) பரஸ்பர நிதி (Mutual Fund)

நாம் செய்யக்கூடிய முதலீட்டில் இருந்து Dividend போன்ற வருமானம் வேண்டுமெனில் நாம் IDCW (Dividend)  முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.

ஏனெனில், இம்முறையில் நம்முடைய முதலீட்டில் இருந்து நமக்கு சிறிய வருமானம் கிடைக்கும்.‌ அதாவது, பங்குச் சந்தையில் நிறுவனங்களின் பங்குகளில் நாம் முதலீடு செய்தால், அந்த நிறுவனம் தனக்கு வரும் லாபத்தில் தன்னுடைய பங்குதாரர்களுக்கு  சிறிய தொகையை கொடுக்கும். அதாவது டிவிடெண்ட் (Dividend) தரும். அது போல இந்த IDCW முறையிலும் நமக்கு Dividend  போன்ற சிறு தொகை கிடைக்கும்.

 ஆனால், சாதாரண நிறுவனங்கள் தரும் டிவிடெண்டுக்கும் (Dividend) இந்த பரஸ்பர நிதி நிறுவனம் (Mutual Fund company) தரும் டிவிடெண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. சாதாரண நிறுவனம் லாபத்தில் இருந்து மட்டும் தான் டிவிடெண்ட் தரும். 

ஆனால், இந்த பரஸ்பர நிதி நிறுவனம் (Mutual Fund Company) நம் செய்துள்ள முதலீடு மற்றும் லாபத்தை சேர்த்து டிவிடெண்டாக (Dividend) வழங்கும்.            இந்த காரணத்தினால் தான் இதற்கு IDCW (Income Distribution Capital  cum Withdrawal) வந்தது. இதற்கு முன்பாக இதற்கு டிவிடென்ட் என்ற பெயர்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும், மற்ற நிறுவனங்களைப் போல இந்த பரஸ்பர நிதி நிறுவனமும் டிவிடெண்ட் கொடுக்க விரும்பினால் மட்டுமே நமக்கு  டிவிடெண்ட் கிடைக்கும் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்த IDCW பரஸ்பர நிதியில் (Mutual Fund) மூன்று வகை உள்ளது.

1.Dividend Payout

            இந்த முறையில் நமக்கான டிவிடெண்ட் (Dividend) நம்முடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வந்துவிடும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2.Dividend Reinvestment

    இந்த முறையில் நம்முடைய டிவிடெண்ட் (Dividend) பணமானது அதே பரஸ்பர நிதி திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யப்படும்.

3.Dividend Sweep

       இந்த முறையில் நம்முடைய டிவிடெண்ட் (Dividend) பணமானது நம்முடைய முதலீடு செய்துள்ள பரஸ்பர நிதி நிறுவனத்தின் வேறு ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

 இந்த IDCW (டிவிடெண்ட்) முறையில் அதிகமான வரி (Tax) என்பது உள்ளது. அதனால், இம்முறையை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு Dividend போன்ற சிறிய வருமானம் வேண்டுமெனில் இதற்கு மாறாக, வேறு முறைகளை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, SWP (Systematic Withdrawal Plan) முறையை  பயன்படுத்தலாம். இம்முறையில் வரியும் குறைவு, அதே நேரத்தில் நமக்கு சிறிய வருமானமும் கிடைக்கும்

...நமக்கான முதலீட்டை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..

வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,



Powered by Blogger.