பிரதமர் மோடியை பின்தொடரும் வெள்ளை மாளிகை !

அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ Twitter பக்கத்தால் பின் தொடரப்படும்,  உலக நாடுகளை சேர்ந்த ஒரே தலைவர்  பிரதமர் மோடி மட்டுமே ஆவார்.


21 மில்லியன் பின்தொடர்பாளர்களை (Followers) கொண்டுள்ள அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் Twitter கணக்கினால் வெறும் 19 பேர் மட்டுமே பின் தொடரப்படுகின்றனர்.

அவர்களில் அதிபர் ட்ரம்ப், மெலானியா ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட 16 பேர் அமெரிக்கர்களாவர்.

இவர்கள் தவிர உலக தலைவர்களில் பிரதமர் மோடி மட்டுமே பின் தொடரப்படுகிறார்.

மேலும், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் அலுவலக twitter கணக்குகளும் பின் தொடரப்படுகின்றன.
  மற்ற நாட்டை சேர்ந்த எந்த கணக்குகளும் பின் தொடரபடபில்லை.

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீடித்து வரும் நட்பை பிரதிபலிக்கும் விதமாக இது பார்க்கப்படுகிறது.
Powered by Blogger.