இந்திய பொருளாதாரம் சரிவடையும் உலக வங்கி!!!

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2020ஆம் நிதியாண்டில் 5 சதவீதமாகவும், 2021ஆம் நிதியாண்டில் 2.8 சதவீதமாகவும் சரிவடையும் என உலக வங்கி கணித்துள்ளது.


கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால், வர்த்தகம், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் முடங்கி, பொருளாதார சுழற்சி தடை பட்டுள்ளது.

இதனால், பொருட்கள் உற்பத்தியும், ஏற்கெனவே உற்பத்தியான பொருட்கள் கிடைப்பதிலும் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

 இதனால், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகவே இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

மேலும் நடப்பு 2021ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக சரிவடையும் என்றும், தெற்காசிய நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Powered by Blogger.