ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது எப்படி?? ( HOW TO LINK PAN CARD WITH AADHAR CARD)


ஆதார் எண்ணுடன் 

பான் எண்ணை இணைப்பது 

பற்றிய வழிமுறைகள்



ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


 இவற்றில் இணையம் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக எளிமையாக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்


E- filling பக்கத்திற்கான இணைய இணைப்பு

              ➡️ E- Filling பக்கம்


இணைய வழியில்   இணைப்பதற்கான வழிமுறைகள்:

படி 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை பயன்படுத்தி அல்லது வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தள முகவரிக்கு சென்று (Link Aadhar) அதில்  e-filing பக்கத்திற்கு செல்லவும்.

படி 2

அந்த பக்கத்தின்  ஆதார் தகவல்  கேட்கப்பட்டிருக்கும். 
அதில் உங்கள்  ஆதார் எண் (12 இலக்கம்) மற்றும்  பான் எண்ணை  (10 இலக்கம்) பதிவிட வேண்டும்.


படி 3

உங்கள் தகவலை பதிவு செய்த பின் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறியீடுகளை பதிவு செய்ய வேண்டும்.

பார்வையற்றோருக்கு MOBILE PHONE -ல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய எண் (OTP)  அனுப்படும். அதை உள்ளீடு செய்து தொடரலாம்.

படி 4  

இறுதியாக 'Link Aadhaar"  Button -ஐ  அழுத்தினால் போதும்.

குறுஞ்செய்தி (SMS) மூலம் இணைக்கும் முறை:

குறுஞ்செய்திகள் மூலமாக இணைக்க, உங்கள் MOBILE -லில் UIDPAN  <space>   <ஆதார் எண்(12 இலக்கம்)> <space> <பான் எண் (10 இலக்கம்)> என்று Type செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.


        For more, Click ➡️ TNEmployGuys...
     

Powered by Blogger.