மூன்று மணி நேரத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு !!!


மூன்று மணி நேரத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு


 குஜராத்தின் அகமதாபாத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும்  3 மணி நேரத்துக்காக அந்த மாநில அரசு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளது.



அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் வருகைக்காக அகமதாபாத் நகராட்சியும், அகமதபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து நகரை அழகுப்படுத்தி சாலைகளை சீரமைத்துள்ளது.

சுமார் 80 கோடி ரூபாய் செலவில் சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைத்தல் பணியும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு பணியும்,  10 கோடி ரூபாய் செலவில் விருந்தினர்களின் போக்குவரத்து மற்றும் தங்குவதற்கான ஏற்பாடும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி-டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.


         For more, Click ➡️ TNEmployGuys...
     

Powered by Blogger.