அதிக ஆயுதம் வாங்கிய நாடு இந்தியா !!!

 உலக அளவில் அதிக ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம்  இடத்தை பிடித்துள்ளது.



 ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக கடந்த ஆண்டு அதிக அளவு ஆயுத கொள்முதலை இந்தியா நடத்தி உள்ளது என்று  தெரிவித்துள்ளது.

 இந்தியா 2018 ஐ விடவும்  கடந்த ஆண்டு 6.8% அதிகமாக 71.1 பில்லியன் டாலர் அளவுக்கு (5,40,360 கோடி ரூபாய்)  ராணுவ தளவடங்களை வாங்கியுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து அதிகம் ஆயுதம் கொள்முதல் செய்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான இறுக்கமான ராஜீய உறவுகளே  இந்தியா அதிக தொகைக்கு ராணுவ தளவாடங்களை வாங்கிக் குவிக்க காரணம் என்றும் அது தெரிவித்துள்ளது. 

மேலும், ராணுவ தளவாட கொள்முதலில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யாவும், ஐந்தாவது இடத்தில் சவூதி அரேபியாவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.