நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (About Netaji subhas Chandra Bose )



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



 சுபாஷ் சந்திரபோஸ் ஜனவரி 23ஆம் தேதி 1897 வது வருடம் கட்டாக் (ஒரிசா மாநிலம்) என்ற இடத்தில் பிறந்தவர். 

இவரது தந்தை  ஜானகிநாத் போஸ், தாய் பிரபாவதி தேவி. இவர் தன் இளம் வயதிலேயே இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

 தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை  முடித்து அப்போது விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார்.பிறகு 1938ம் வருடம் காங்கிரசின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இவர் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கண்டு அஞ்சி நடுங்கி ஆங்கில அரசு 1940 வருடம்  இவரை சிறையில் அடைத்தது.  பல்வேறு உண்ணாவிரதம் போராட்டம் சிறைக்குள்ளேயே நடத்தி வெளியே வந்தார். வெளியே வந்த உடனே வெளிநாடுகளுக்கு பயணம் சென்று மற்ற நாடுகளிடம் இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு கோரினார்.

  அந்த காலகட்டத்தில் பலமாக இருந்த ஜப்பானிடம் ஆதரவு கோரி ஜப்பானுக்குச் சென்று சிலகாலம் தங்கியிருந்தார். 
  1945 வருடம் ஆகஸ்ட் 18ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாக ஜப்பான் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
 நேதாஜியின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.
  " ஜெய் ஹிந்த்" என்று வார்த்தைக்கு சொந்தக்காரர்  நமது "நேதாஜி" சுபாஷ் சந்திரபோஸ் ஆவார்.
அவர் சொன்னது போல நமது இந்தியா 1947ம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை அடைந்தது. என்றும் நேதாஜி என்ற வீரமகனின் புகழ் அழியாது.


        For more, Click ➡️ TNEmployGuys...
Powered by Blogger.